விஜயகாந்த் மறைந்த துக்கம் தாங்காமல் வீட்டிலே கதறி அழுத வடிவேலு…

0
Follow on Google News

வடிவேலு விஜயகாந்துடன் நடித்த சின்னக்கவுண்டர் படம் தான் அவரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. படத்தில் வடிவேலு சின்னக்கவுண்டராக வரும் விஜயகாந்துக்குப் படம் முழுவதும் குடைபிடித்தபடி வருவார். ஒரு ஹீரோவின் கூடவே ஒரு காமெடியன் வரும்போது ரசிகர்கள் அவரையும் கவனிக்கவே செய்வார்கள். யார் இந்த காமெடியன் என்று. அதுதான் வடிவேலுவை வளர்ச்சி அடையச் செய்தது.

சின்னக்கவுண்டர் படத்துல வடிவேலு தான் விஜயகாந்துக்கு படம் முழுவதும் குடைபிடிப்பார். ஆனால் இயக்குனரே ஒரு சில காட்சிகளில் வந்தால் போதும் என்று தான் சொன்னாராம். ஆனால் விஜயகாந்த் தான் வடிவேலு நம்ம ஊருக்காரன்னு படம் முழுவதும் வரச் செய்தாராம். ஆனால் வடிவேலோ விஜயகாந்தை தொடர்ந்து தாக்கி வருகிறார். அதற்குக் காரணம், விஜயகாந்தின் வக்கீல் ஒருவர் இறந்து விட்டார். அவரது வீடு சாலிகிராமத்தில் வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் இருந்துள்ளது.

அங்கு அவருடைய இறப்பிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டு அருகே வண்டியை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத வடிவேலு, “என் வீட்டு பக்கம் என் வண்டியை நிறுத்துறீங்க, வண்டி எல்லாம் எடுங்க” என்று கோபமாக சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. சாவு வீட்டுக்கு வந்தவர்கள் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு விடுவார்கள். அதுவரை பொறுத்துக்கொள்ளக் கூடாதா? இப்படி கோபமாக பேச வேண்டுமா? என விஜயகாந்தின் நண்பர்கள் சிலர் கேட்க, அதற்கும் மரியாதை இல்லாமல் அவர்களை மீண்டும் திட்டி அந்த கார்களை எடுக்கச் செய்துள்ளார்.

மேலும் 2003ம் ஆண்டு சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்த் ஒப்பந்தம் ஆன போது, வடிவேலுவை விஜயகாந்த் ரெக்கமெண்ட் செய்கிறார். ஆனால், அந்த படத்தில் நடிக்க வடிவேலு பீக்கில் இருந்ததால் பெரிய தொகை கேட்கிறார் என்ற தகவல் விஜயகாந்திற்கு வந்ததும், வடிவேலுவிடம் நான் பேசுகிறேன் என்று விஜயகாந்த் கூறினார். இந்த நேரத்தில் தான் இருவரும் விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது, விஜயகாந்த் வடிவேலுவிடம் சொக்கத்தங்கம் படத்தில் நான் நடிக்கிறேன். நீ சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு நடி என்று சொல்ல, கடுப்பான வடிவேலு, நான் உன்ன ஒரு படத்திற்கு ரெக்கமெண்ட் பண்றேன் நீ அந்த படத்தில் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடி என்று சொல்லிவிட்டார். இந்த பிரச்சனைத் தான் கொஞ்சம் கொஞ்சம் பெரிதாகி 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய அளவில் பிரச்சனையாகி விட்டது.

வடிவேலு பிரச்சாரம் செய்த அனைத்து மேடையிலும் புதுசா கட்சி ஆரம்பித்தவன், குடிகாரன் என்று விஜயகாந்தை படுமோசமாக தாக்கிப்பேசினார். விஜயகாந்தை தாக்கி பேசுவதற்காகவே பிரச்சார மேடையை வடிவேலு பயன்படுத்திக்கொண்டார். அந்த அளவிற்கு அவர் வன்மத்தை மனதில் வைத்து இருந்தார். ஆனால், கேப்டன் விஜயகாந்தோ வடிவேலு பற்றி எந்த ஒரு இடத்திலும் தவறாக பேசியது இல்லை என்றார்.

ஆனால் வடிவேலுக்கோ விஜயகாந்த் மேல் இருந்த வன்மம் என்றும் குறையவில்லை. கடந்த மாதம் விஜயகாந்த் இறந்த பொழுது அவரது இறப்பிற்கு கூட வரவில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுது கூட பார்க்க வரவில்லை. இந்நிலையில் நேற்று மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளம் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர். அத்தருணத்தில் கூட வடிவேலு பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த நிகழ்ச்சிகள் பலர் விஜயகாந்த் பற்றி உரையாற்றினர். அப்போது நடிகர் சரத்குமார் பேசியதாவது, “விஜயகாந்தின் சில விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும். அவருடைய குணம், பழகுகின்ற விதம், வள்ளல் பண்பு, இதுபோன்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.
அவர் கோவம் உள்ளவர் என எல்லாருக்கும் தெரியும். கோவம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அப்படிப்பட்ட குணம் படைத்தவர் தான் அவர்.

கோவத்தை உடனே மறந்துவிடுவார். இவன் இப்படி பேசிட்டான், இவன ஏதாவது பண்ணனும் என்று நினைத்ததே கிடையாது. வடிவேலு வரவில்லையே என என்னிடம் கேள்வி கேட்டபோது, வடிவேலு வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை நினைத்து அழுதிருக்கலாம். அவரும் மனிதர்தான். வர முடியலேயே, வந்தால் ஏதாவது திட்டுவாங்களோ என நினைத்திருக்கலாம். ஆனால் மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் படைத்த விஜயகாந்த் அவர்கள், இதையெல்லாம் பெரிதாக எடுத்திருக்க மாட்டார். வடிவேலு நிச்சயமா அழுதிருப்பார் என்றேன். தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ள வரை விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார்.” என்று பேசியுள்ளார்.