நடிகர் வடிவேலு மார்க்கெட் இழந்து கடந்த சில ஆண்டுகளாக குறைவான படங்களில் நடித்து வந்தாலும், முந்தைய காலகட்டத்தில் வருடத்திற்கு 10 படம் 15 படம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். கவுண்டமணி செந்தில் என்ற இரு காமெடி ஜாம்பவான்களின் காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் கோலோச்சி நின்றவர் வடிவேலு. இப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் எல்லா படங்களிலும் ரவுண்ட் கட்டி நடித்து வந்த வடிவேலு.
ஒரு கட்டத்தில் எப்படி மிக குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்திற்கு வடிவேலு சென்றாரோ, அதே போன்று ஒரே அடியாக கீழே விழுந்த வடிவேலுவை வைத்து படம் எடுக்க எந்த ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் முன் வரவில்லை, இதனால் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக பட வாய்ப்பு சரியாக அமையாமல், இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்கு முயற்சியில் இறங்கிய வடிவேலுக்கு கை கொடுக்கவில்லை, இந்நிலையில் சமீப காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் வடிவேலு.
இவை அனைத்திற்கும் காரணம் வடிவேலுவின் தலைக்கனம், சக நடிகர்களை அவர் நடத்தும் விதமும் தான். ஆம்,நடிகர் வடிவேலு என்னதான் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் சக மனிதரிடம் நடந்து கொள்ளும் விதம் என்பது மோசமானதாகத்தான் இருந்திருக்கிறது. வடிவேலுவின் நடவடிக்கைகள் குறித்து அவருடன் நடித்த சக நடிகர்களே பல இடங்களில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, தன்னுடன் நடித்த விவேக், போண்டாமணி, விஜயகாந்த் போன்ற சக நடிகர்களின் மறைவிற்கு நேரிலும் போகாமல், இரங்கலும் தெரிவிக்காமல் இருந்தது வடிவேலுவின் நடவடிக்கைக்கு சான்றாகச் சொல்லலாம். அதுமட்டுமின்றி, இத்தனை நடிகர்களின் மறைவிற்கு போகாத வடிவேலு, கலைஞர் 100 நிகழ்ச்சியில் மட்டும் முதலாளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததற்கு என்ன காரணம் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு வடிவேலு மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இருப்பினும் அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாதவாறு இருந்து வருகிறார். சினிமாவில் காமெடி திறமையால் ஏகப்பட்ட பணத்தையும் புகழையும் சம்பாதிக்க தெரிந்த வடிவேலுவிற்கு சக மனிதரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது பற்றி தெரியவில்லை என்றும் இன்று வரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே வடிவேலு உடன் பணிபுரிந்த சக நடிகர்கள் அவரது நடவடிக்கை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்த நிலையில், தற்போது காமெடி நடிகை ஆர்த்தியும் வடிவேலுவின் மோசமான முகம் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை ஆர்த்தி வடிவேலுவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது சிறப்பாக நடித்த ஆர்த்தியை பார்த்த வடிவேலு, அவரை கூப்பிட்டு “நீ நல்லா நடிக்கிறமா” என்று பாராட்டி இருக்கிறார்.
மிகப்பெரிய காமெடி நடிகரே நம்மளை பாராட்டி விட்டார் என்ற குஷியில் ஆர்த்தி இருந்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு வடிவேலு இயக்குனரிடம் சென்று “இந்தப் பொண்ணு என்ன விட ரொம்ப நல்லா நடிக்குது, அந்த காட்சிகளில் என்னுடைய காமெடி எடுபடாது ..அதனால அந்த பொண்ணு வேண்டாம்” என்று சொல்லிவிட்டாராம். இதனால் ஆர்த்திக்கு அந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம். பொதுவாகவே நடிகர் வடிவேலு தன்னைவிட நல்லா நடிக்க கூடியவர்கள் கூட நான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிடுவார், ,அவருடைய பாம்பு குணத்தை யாராலும் மாற்ற முடியாது என்று ஆர்த்தி அந்த பேட்டியில் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு காலத்தில் வடிவேலு தன்னுடன் யார் நடிக்க வேண்டும் வேண்டாம் என முடிவு செய்யும் இடத்தில் இருந்தார், ஆனால் தற்பொழுது எந்த ஒரு முன்னணி நடிகரும் வடிவேலு உடன் இணைந்து நடிக்க தயாராக இல்லை இது தான் கர்மா என்கிறது சினிமா வட்டாரங்கள்..