எந்த வழி வந்தாலும் வந்த வழி மறவாதே என்கின்ற பழமொழிக்கு மாறாக தான் கடினமாக போராடி வந்த நிலையை மறந்து ஆணவத்தில் ஆடிய வடிவேலுவின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. ராஜ்கிரன் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய வடிவேலு பின்பு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வந்தார்.
கதாநாயகர்களுக்கு சமமான சம்பளங்களை வாங்கி பிசி நடிகராக வடிவேலு. ஒரு உயரத்திற்கு வந்த பின்பு சக நடிகர்களிடமே ஈகோ பார்க்க ஆரம்பித்து விட்டார் நடிகர் வடிவேலு. இதன் காரணமாக பல நடிகர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு அடுத்தடுத்து அந்த நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இழந்தார். அஜித் நடித்த ராஜா படத்தில் அஜித்தை அவமரியாதையாக நடந்து கொண்டதன் காரணமாக அஜித் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று முன்கூட்டியே இயக்குனர்களிடம் கண்டிஷன் போட்டு விடுவார் அஜித்.
இப்படி பல நடிகர்களிடம் சண்டையிட்டு வந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் அவர் நடிக்கும் படங்களில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய சிரமத்தையும் ஏற்படுத்தினார். இதனால் சுமார் பத்து வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கினார் வடிவேலு. நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் வடிவேலு.
அதில் நாய் சேகர் ரிட்டன் படத்தில் கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து காமெடி காட்சிகளிலும் சில படங்கள் நடித்து வருகிறார். வடிவேல் நாய் சேகர் படம் வடிவேல் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுக்குமா என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
நாய் சேகர் ரிட்டன் படத்தில் ஆனந்தராஜ் நடித்த காட்சிகள் மட்டுமே சிரிக்கும் படியாகவும் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது, மற்றபடி அந்த படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன் படத்தில் ஆனந்தராஜ் நடித்த பல காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த காட்சிகளை பார்த்த வடிவேலு இது தன்னை ஓவர் டேக்ஸ் செய்வது போல் உள்ளது என்று, ஆனந்தராஜ் நடித்த பல காட்சிகளை உடனே நீக்க சொல்லி இயக்குனர்களுக்கு குடைச்சல் கொடுத்துள்ளார்.
இதனால் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது, மேலும் தனக்கேற்றார் போல் கதைகளிலும் உள்ளே புகுந்து குழப்பம் செய்து படத்தையே நாசம் செய்து விட்டார் வடிவேல் என்றும் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தன்னுடைய ஆணவத்தால் சினிமாவின் இருந்து நிரந்தரமாக ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளார் வடிவேலு.