நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டான் மற்றும் டாக்டர் படங்கள் தொடர் வெற்றியை பெற்று அடுத்த வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால், மாவீரன் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த படம் வெளியாவதற்கு முன்பே டிஜிட்டல் ரைட் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் அதிக விடுமுறை நாட்களை கணக்கிட்டு வெளியிடுவதற்காக முடிவு செய்யப்பட்டு, வரும் பக்ரீத் பண்டிகை அன்று தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதை ஒட்டி வியாழன் அன்று மாவீரன் படத்தை வெளியிட்டு,
வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என 5 நாட்களில் வசூலை அள்ளி குவித்து விடலாம் எனா பக்ரீத் அன்று மாவீரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கும் மாமன்னன் படம் அதே பக்ரீத் பண்டிகை என்று வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
மேலும் உதயநிதி நடித்த படங்களிலேயே மாமன்னன் படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இந்த படம் சுமார் 55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதியின் மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகைக்கு வருவதால், மாவீரன் படத்தின் படத்தை ஜூலை மாதம் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் உடன் எதற்கு நேரடியாக மோதுவது என பின்வாங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.