பைக் இனி ஓட்ட முடியாது… பொழைக்க வேறு தொழிலை தொடங்கிய TTF வாசன்… இப்பாவது உழைச்சு சாப்பிடணும்னு என்ன வந்துச்சே…

0
Follow on Google News

Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். இவர் பைக் ஓட்டும் சாகசங்களை பார்த்து பூரித்து போய் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார். இவருக்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு வட இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்த விபத்தின் போது அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்ட டிடிஎஃப் வாசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தினர் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இருந்து வெளியில் வர ஜாமீன் விண்ணப்பித்த அவருக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார். மேலும் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது, காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம். பின் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப்பிறகு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கிடைத்தது.

இதனையடுத்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி மூன்று வாரங்களுக்கு தினமும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரது யூடியூப் சேனைலை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 40 லட்சம் ஃபாலோய்ஸ்களுடன் இயங்கும் தனது யூடியூப் சேனல் முடக்கப்பட்டால், லட்சம் லட்சமாக பணம் கொட்டுவது நின்று விடுமே என்ற பதற்றதத்தில், இன்றைக்கு ஒரு புதிய யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார் டிடிஎப் வாசன்.

Immortal TTF Vasan என்கிற பெயரில் அவர் ஒரு புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதித்துறை நடுவன் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜராகியுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கையெழுத்து போட வந்துள்ளேன். இப்படி வந்துபோவது ரொம்ப அலைச்சலாக உள்ளது. இப்படி வரும்போது என்னுடைய ஒருநாளே போய்விடும்.

டிடிஎஃப் ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என ஒரு கம்பெனி ஆரம்பித்துள்ளேன். தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இதுகுறித்தானத் திட்டம்தான் இப்போது செய்து வருகிறோம்” என்றார். இந்த நிலையில் அவர் நடிப்பதாக இருந்த மஞ்சள் வீரன் படம் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸாவதாக இருந்தது. இந்த படத்தில் டிடிஎஃப் வாசன் பைக் ரேஸராகவே வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது அதில் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல் இருந்தது. போஸ்டரில் ஒரு அய்யனார் சிலையும் இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நின்றது. மேலும் பைக் ஓட்ட 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இனி சினிமாவில் கூட பைக்கை ஓட்ட முடியாத நிலை வாசனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தொழில் தொடங்க பிளான் போட்டுள்ளார் டிடிஎஃப் என்று அவரை அனைவரும் ட்ரோல் செய்து வருகின்றனர்