நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மரண அடி வாங்கி மண்ணை கவ்வியுள்ளது. சுமார் 8 படங்கள் தொடர்ந்து அஞ்சான் தொடங்கி காப்பான் வரை தோல்வி படங்களை மட்டும் கொடுத்து வந்த நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய்பீம் படங்களை வெற்றியை கொடுத்து சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் மரண அடி வாங்கி மீண்டும் நடிகர் சூர்யாவை பின்னோக்கி தள்ளியுள்ளது. இந்த படம் முதல் பாதி படு மொக்கையாக இருந்தாலும், இரண்டாம் பாதி பார்க்கும் வகையில் இருந்தது, அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் முதல் மூன்று நாட்கள் கணிசமான மக்கள் வந்து இந்த படத்தை பார்த்து இருந்தால் கூட வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருக்கும், ஆனால் படம் வெளியான அன்றே தியேட்டர்கள் காற்று வாங்கியது.
எதற்கும் துணிந்தவன் மரண அடி வாங்கி மண்ணை கவ்வியதற்கு முக்கிய காரணம் நடிகர் சூர்யா என்கிற தனி மனிதன் தான் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னிய சமூகத்தை இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிப்பு தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக வெடிக்க பாமக மற்றும் வன்னியர் சங்கமும் களத்தில் குதித்தது.
ஆனால் ஒரு சமூக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு அல்லது ஒரு சிறிய வருத்தம் கூட கேட்காமல் வன்னிய சமூக மக்களை அலட்சிய படுத்திவிட்டு, ஜெய்பீம் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக அறிக்கை விட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும், ஜெய்பீம் படத்தின் வெற்றி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார் சூர்யா, இது வன்னிய சமூக மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் புறக்கணிக்க தொடங்கினார்கள், இதன் தாக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது, இதனால் படம் எப்படி இருக்கிறது என்கிற விமர்சனம் வெளியாவதற்கு முன்பே மண்ணை கவ்வி பெரும் நஷ்ட்டத்தை சந்தித்தது எதற்கும் துணிந்தவன். இந்த எதிப்பு சூர்யா நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்திலும் தொடரும் என தெரிகிறது.
இதனால் வன்னிய சமூகத்தினரை சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் சூரியா. இதனை தொடர்ந்து அந்த மக்களை சமாதானம் செய்யும் வகையில் நடிகர் சத்தியராஜ் பார்முலாவை பின்பற்றி விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடலாம் என கூறப்படுகிறது, அதாவது சத்யராஜ் நடிப்பில் பாகுபாலி படம் கர்நாடகாவில் வெளியாக அந்த மாநில மக்கள் கடும் எதிப்பு தெரிவித்தனர். காவேரி விவகாரத்தில் கர்நாடக மக்களை இழிவாக சத்தியராஜ் பேசியதாகவும்.
அதனால் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர், இதனை தொடர்ந்து கர்நாடக மக்களிடம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்த பின்பே அவர் நடித்த பாகுபாலி படம் வெளியானது, அதே பார்முலாவை பயன்படுத்தி நடிகர் சூர்யா வன்னிய சமூக மக்களிடம் வருத்தம் தெரிவித்து விரைவில் அறிக்கை வெளியிடலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.