பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையிலான வார்த்தை போல் மிகப் பெரிய உச்சத்தில் எட்டி கடும் விவாத பொருளாக மாறி உள்ளது. அமீர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இல்லை ஞானவேல் ராஜா தான் எங்களை ஏமாற்றிவிட்டார் என மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வரும் நிலையில், அமீருக்கு ஆதரவாக அடுத்தடுத்து சினிமா துறையினர் களம் இறங்கி கருத்துக்களை பதிவு செய்து வந்தது ஞானவேல் ராஜாவும் ஞானவேல் ராஜாவின் மற்றும் சிவக்குமார் குடும்பமும் சற்றும் எதிர்பார்த்து இருக்காது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையில் நடந்த இந்த பிரச்சனையில் சிவக்குமார் குடும்பம் குறித்த பல சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கார்த்தியை நடிகராக அறிமுகம் செய்வதற்காக ஞானவேல் ராஜா தயாரிப்பில் அமீர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த பருத்திவீரன் திரைப்படம் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அளவுக்கு அதிகமாக போனதால் இதுக்கு மேல் என்னால் பணம் தர முடியாது என ஞானவேல் ராஜா ஒதுங்கி கொண்டுள்ளார்.
கடுமையான பொருளாதார சிக்கலில் பருத்திவீரன் சிக்கி தவிக்க, நடிகர் கார்த்திக் அறிமுகமாகும் முதல் படம் அந்த வகையில் தன்னுடைய தம்பி முதல் படம் என சூர்யா உடனே படத்தை எடுக்க பண உதவி செய்து இருக்கலாம். அல்லது கார்த்திக் தந்தை சிவகுமார் பண உதவி செய்திருக்கலாம், ஆனால் சிவகுமார் கையில் இருந்து நயா பைசா வெளியாக்க மாட்டார் என்றாலும் சிவகுமார் தம்பிக்காக நிச்சயம் செய்து இருக்கலாம்.
இந்நிலையில் தற்பொழுது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பருத்தி வீரன் விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக பேசிய அனைவருமே சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் ஓன்று மட்டுமே வெட்ட வெளிச்சமாகி உள்ளது, அதாவது கார்த்திக் ஹீரோவாக அவருடைய தந்தை சிவகுமார் அல்லது அவருடைய அண்ணன் கார்த்திக் இதில் யாருமே பண உதவி செய்யவில்லை, ஒரு கட்டத்தில் அமீர் பணம் போதவில்லை என்று சொன்னதும், படத்தை நீங்களே வெச்சுக்கங்க என்று அமீரிடம் கை விரித்துள்ளார் சூர்யா.
இந்நிலையில் மனைவி ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும் 36 வயதினிலே என்ற படத்தினை சொந்தமாக தயாரித்து தனது மனைவியை சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வைத்தவர் சூர்யா, அந்த வகையில் மனைவிக்காக சொந்த பணத்தை போட்டு படம் எடுத்த சூர்யா, தம்பி கார்த்திக் முதல் படம், அவருடைய சினிமா எதிர்காலமே இதில் தான் இருக்கும் என்பதை உணர்ந்து என் பொருளாதார சிக்கலில் பருத்திவீரன் சிக்கி தவித்த போது சூர்யா உதவி செய்யவில்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
அந்த வகையில் நடக்கும் சம்பங்கள் குறித்து, அண்ணன் தம்பி பாசம் எல்லாம் மேடையில் தானா.? மற்றபடி பணம் என்றால் அண்ணனாவது தம்பியாவது என்கின்ற ஒரு சராசரி மனிதன் போல தான் கார்த்திக் மற்றும் சூர்யா இருவரும் இருந்துள்ளார்களா.? அண்ணன் தம்பி பாசமெல்லாம் மேடையில் தானா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள், அதே நேரத்தில் குடும்பம் இருந்தா பிரச்சனை இருக்க தான் செய்யும், சில குடும்பங்களில் அது வெளியில் தெரியும், சிவகுமார் குடும்பத்தில் வெளியில் தெரியாமல் பார்த்து கொள்கிறார்கள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
அந்த வகையில் ஞானவேல் ராஜா தேவையின்றி 17 வருசத்துக்கு முன்னால் நடந்து பருத்தி வீரன் பட பிரச்சனையை தூசி தட்டியது பெருமளவுக்கு சிவகுமார் குடும்பத்தை தான் மிக பெரிய டேமேஜ் செய்துள்ளது என்பதை இந்த விவகாரம் குறித்து எழுந்துள்ள விமர்சனம் மூலம் பார்க்க முடிகிறது.