நடிகர் சூர்யா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகின்றவர். அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு, 5 தேசிய விருதுகள் அறிவித்ததும் கூட பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தேசிய விருது தேர்வு குழுவில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை இடம் பெற்றிருந்ததால் தான் சூரரைப் போன்று படத்திற்கு இத்தனை விருதுகள் கிடைத்துள்ளது என்கின்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் வட மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் இந்த படம் அமைந்துள்ளதாக, குறிப்பிட்ட வன்னிய சமூக மக்கள் மத்தியில் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நடிகர் சூர்யாவை அடித்தால் பரிசு வழங்கப்படும் என்று கூட பகிரங்கமாக வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் அறிவித்தனர். இப்படி இந்த பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்த போது சூர்யாவிடம் பேசி தீர்வு காண அன்புமணி ராமதாஸ் முயற்சி செய்துள்ளார். ஆனால் சூர்யா அதற்கு முன் வரவில்லை, இதனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் சூர்யா நடிப்பில் வெளியாகும் அடுத்தடுத்து படங்களுக்கு வட மாவட்டத்தில் உள்ள வன்னியர் சமூக மக்களிடம் எதிர்ப்பை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், புதிய படம் ஒன்றை இயக்குகிறார், இது சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் அவர்களின் வாழ்க்கை வரலாறை குறிக்கும் படம் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே ஜெய்பீம் படத்தின் மூலம் வட மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பை பெற்று இதுவரை அதை சரி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா. தற்போது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் கதையில் கெஸ்ட் ரோலாக நடித்து ராஜகோபால் சார்ந்த சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.
இந்த புதிய படத்தில் ஜெய் பீம் போன்று சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றால், ராஜாகோபாலன் சார்ந்த பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அந்த சமூகத்தினர் எதிர்ப்புகளை சூர்யா சந்திக்க நேரிடும், அதனால் சூர்யாவின் நலம் விரும்பிகள் பலர் இந்த படத்தில் சூர்யா நடிப்பதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.