நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா என்ற அடையாளத்துடன்தான் தமிழ் சினிமாவுக்குள் அவர் வந்தார் சூர்யா. இயக்குனர் வசந்த் நேருக்கு நேர் என்ற படத்தில் இரட்டை நாயகர்களில் ஒருவராக நடிகர் சூர்யாவை அறிமுகம் செய்தார். முதலில் சூர்யா கேரக்டரில் சில நாட்கள் நடித்தவர் அஜீத்குமார். இந்நிலையில் அஜீத்குமார் விலகிய நிலையில் அந்த கேரக்டரில் சூர்யாவை வசந்த் நடிக்க வைத்தார்.
நேருக்கு நேர் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சிம்ரனை இந்த படத்தில் பாடல் காட்சிகளில் வசந்த் நடனமாட விடாமல் ஓட விட்டுக்கொண்டே இருந்தார். ஏனென்றால் அவருக்கு ஜோடியாக நடித்த சூர்யாவுக்கு நடனமாட தெரியாது. அதனால் சிம்ரனை ஓடவிட்டு சூர்யாவை துரத்த விட்டு இந்த படத்தின் பாடல் காட்சிகளை எடுத்து எப்படியோ சமாளித்தார் இயக்குனர் வசந்த்.

கேமரா முன் நிற்க தெரியாமல் நடிக்க தெரியாமல் வசனம் பேச தெரியாமல் நடனம் தெரியாமல் தடுமாறிய நடிகர் சூர்யாவுக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்தவர் இயக்குனர் அமீர். பிறகு சூர்யாவை ஒரு ஹீரோவாக மாற்றிஒரு நாயகன் அந்தஸ்துக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் பாலா தான்.
அதன் பிறகு கஜினி காக்க காக்க வாரணம் ஆயிரம் ஏழாம் அறிவு சிங்கம் சிங்கம் 2 என பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா இப்போது 11 ஆண்டுகளாக ஒரு வெற்றிப் படத்தை கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். 2014ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு இதுவரை சூர்யா நடித்த எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.
இப்படி சூர்யா தொடர் தோல்விகளை சந்திக்க காரணம், அவரது வாய்க்கொழுப்புதான் என்று கடும் விமர்சனம் இருந்து வருகிறது. ரஜினியிடம் நீங்கள் நடித்த படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், படம் நன்றாக வந்திருக்கிறது. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றுதான் அடக்கமாக சொல்கிறார். 170 படங்கள் நடித்த சூப்பர் ஸ்டாரே அப்படி சொல்லும் போது, கங்குவா படத்தை பற்றிப் பேசிய சூர்யா படம் நெருப்பா இருக்கும், நீங்க எல்லாம் வாயை பொளந்துக்கிட்டு பார்ப்பீங்க என்றார்.
கங்குவா படம் வெளியான பிறகு அதை பார்த்த ரசிகர்கள் எப்படி கழுவி கழுவி ஊற்றினார்கள் என்பது தமிழ்நாடே அறிந்த விஷயம், ஒரு கலைஞனுக்கு தேவை தன்னடக்கம். குறிப்பாக நாவடக்கம். அது இல்லாததால்தான் சூர்யா அடிக்கடி சர்ச்சையில் விமர்சனங்களில் சிக்கிக் கொள்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் சமுதாய பிரச்னைகள் குறித்து ஆவேச கேள்வி எழுப்பும் சூர்யா, திமுக ஆட்சி காலத்தில் எதுபற்றியும் கருத்து சொல்லாமல் அமைதி காக்கிறார்.
இந்த சூழலில் அவரது காதல் மனைவி ஜோதிகா அவ்வப்போது ஏதேனும் கிளறி விட்டு சர்ச்சையாக பேசி அவர் பங்குக்கு சூர்யாவுக்கு ஆப்பு வைக்கிறார். நடிகர் சூர்யா குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் இதுபற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் 235 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருந்தாலும் டூரிஸ்ட் பேமிலி படத்தை விட ஷேர் கம்மிதான்.
யாரும் திட்டமிட்டு வதந்தி பரப்பி சூர்யாவின் படங்களை ஓட விடாமல் செய்வது இல்லை. அவரது படங்கள் ரொம்பவும் பலவீனமாக இருக்கின்றன. அதுதான் சூர்யாவின் படங்களின் தோல்விக்கு காரணம். மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 11 ஆண்டுகளில் தியேட்டர்களில் வெளியான சிங்கம் 3 பசங்க 2 தானா சேர்ந்த கூட்டம் 24 காப்பான் அஞ்சான் மாசு என்கிற மாசிலாமணி எதற்கும் துணிந்தவன் என்ஜிகே கங்குவா மற்றும் ரெட்ரோ உள்ளிட்ட எந்த படமுமே சரியாக ஓடவில்லை.
இதில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வேட்டை கருப்பு படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதே போல் வெங்கி அட்லூரி படம், வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படம் சூர்யா வசம் இருக்கின்றன. அதற்குள் ஏதாவது வாய்க்கொழுப்பாக பேசி தன் கேரியரை சூர்யா கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி என்று அவரது ரசிகர்களே புலம்புகின்றனர்.