பேச்சுல ஒன்னு… செயலில் ஒன்னு… சூர்யா இதெல்லாம் உங்களுக்கே சரியா.?

0
Follow on Google News

புதிய கல்வி கொள்கை குறித்து ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து பேசி வருகின்ற்றவர் நடிகர் சூர்யா. குறிப்பாக மும்மொழி கொள்கை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். என ஆக்ரோஷமாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

மேலும் “ புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் கவலைப்படாமல், கவனம் செலுத்தாமல் உள்ளனர். இது நாடு முழுவதும் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது. மேலும் 5ம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் இதை எதிர்க்காவிட்டால் அவர்கள் மீது இது திணிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களால் எத்தனை நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்க முடியும். எங்கு போய் படிப்பார்கள். நாடு முழுவதும் சமமான கல்வி முறை இல்லை. சமமான கல்வியைக் கொடுக்காமல் நம்மால் எப்படி கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.

நாம் இப்போது நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கூட நுழைவுத்தேர்வு என்று புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும். நுழைவுத் தேர்வை வைத்து தனியார் பயிற்சி நிறுவனங்கள் தான் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர். என புதிய கல்வி கொள்கைக்கு மற்றும் மும்மொழி கொள்கைக்கும் கடுமையாக கடந்த காலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் சூர்யா.

இந்நிலையில் தற்பொழுது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகியுள்ள நடிகர் சூர்யா ஹிந்தி சினிமாவில் நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஹிந்தி சினிமா முன்னனி இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த சூர்யா தற்பொழுது இந்தியில் ஹிட் பட இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹிந்தி சினிமாவில் நேரடியாக ஹீரோவாக களம் இறங்க இருக்கும் நடிகர் சூர்யா அதற்கு முன்பு தான் நடிக்கும் தமிழ் படங்களை ஹிந்தியில் வெளியிடவும் முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார் சூர்யா.

இதனை தொடர்ந்து சூர்யா தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் கங்குவா படத்தை, தமிழ் , தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் கங்குவா படத்தின் டீசர் ஒன்றை சூர்யா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, நலமா என்றும் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என ஐந்து மொழிகளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். என ஆக்ரோஷமாக நரம்பு புடைக்க இதற்கு முன்பு பேசிய சூர்யா தற்பொழுது அவருடைய படத்தி ஐந்து மொழிகளில் ப்ரோமோஷன் செய்து வருவது, மாணவர்கள் மூன்று மொழி படிக்க கூடாது, ஆனால் சூர்யா பல மொழிகளில் அவர் படத்தை வெளியிட்டு பெரும் தொகை சம்பாரிக்கலாம், என்ன சூர்யா இது.? என்கிற விமர்சனங்கள் சூர்யாவை நோக்கி தற்பொழுது எழுந்து வருவது குறிப்பிடதக்கது.