வன்னிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்காத நடிகர் சூர்யாவை அந்த சமூகத்தினர் தரமான சம்பவம் ஒன்றை செய்து மண்ணை கவ்வ வைத்துள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெய்பீம், இந்த படத்தில் வன்னிய சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக வன்னிய சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, மேலும் ஜெய்பீம் விவகாரத்தில் வன்னிய சங்கம் மற்றும் பாமகவினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக களத்தில் குதித்தனர்.
ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் ஜோதிகா என்பதால், முழு எதிர்ப்பும் சூர்யா பக்கம் திருப்பியது, கடும் எதிப்புகளுக்கு பின் ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டது, இருந்தும் வன்னிய சமூகத்தை தவறாக சித்தரித்து படம் எடுக்கப்பட்டதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா வன்னிய சமூகத்தினர் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வன்னிய சங்கத்தினர் மற்றும் பாமகவினர் வலியுறுத்தினார்கள்.
ஆனால் சூர்யா செவி சாய்க்கவில்லை, மாறாக ஜெய்பீம் வெற்றி கொட்டாட்டம், மேலும் ஜெய்பீம் பிரச்சனையின் போது தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்வது என பிசியாக இருந்தார், இது வன்னிய சங்கம் மற்றும் பாமகவினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தை கைவிட்டுவிட்டு சூர்யா நடிப்பில் புதிய படம் வெளியாகும் போது தங்களின் பலம் சூர்யாவுக்கு தெரியும் என அடுத்த சூர்யா பட ரிலீசுக்கு காத்திருந்தனர் வன்னிய சங்கம் மற்றும் பாமகவினர்.
இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கு துணிந்தவன் மார்ச் 10 இன்று திரையில் வெளியாகியுள்ளது. படம் வெளி வருவதற்கு முன்பே வன்னிய சமூகத்தினர் அதிகம் இருக்கும் மாவட்டக்களில் உள்ள திரையரங்குகளில் சூர்யா நடிப்பில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிட கூடாது என எச்சரிக்கை விடுக்கும் வகையில் வன்னிய சங்கம் மற்றும் பாமகவினர் திரையரங்கு உரிமையாளர் மாவட்ட தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
இதனால் வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையில் வெளியிட்டால் வன்னிய சங்கம் மற்றும் பாமகவினர் திரையரங்கு முன்பு பாபா பட விவாகரத்தில் நடந்தது போன்று வன்முறையில் ஈடுபடலாம் என்கிற பதட்டம் ஏற்பட்ட நிலையில் அவ்வாறு அவர்கள் ஈடுபடவில்லை, மாறாக வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் உள்ள திரையரங்குகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
இதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் பெரும்பான்மையான திரையரங்குகளில் சூர்யா நடிப்பில் வெளியான எதார்க்கும் துணிந்தவன் படத்தை பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கி கொண்டிருக்கிறது திரையரங்குகள்.வன்னிய சமூகத்தினர் திரையரங்குகளை குறி வைக்கவில்லை சூர்யா என்கிற நடிகரை தான் குறி வைத்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இது சூர்யா மீது உள்ள வன்னியர் சமூக மக்களின் எதிரான பிரதிபலன் என கூறப்படுகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிட்ட திரையரங்குகள் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்து வருவதால், திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்ட தொகை கேட்டு நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு அழுத்தம் தரலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடதக்கது.