சமீபத்தில் வெளியான கங்குவா படத்தை ஊரே கழுவி கழுவி ஊத்தி வரும் நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய கணவருக்காக களம் இறங்கி இந்த படம் ஏதோ திட்டமிட்டு அவதூறு பரப்புவது போன்ற தன்னுடைய ஆதங்களை கொட்டி தீர்த்தார். குறிப்பாக கங்குவா படத்தின் கதை என்ன அதனுடைய ஸ்கிரீன் பிளே என்ன என்று ஜோடியாவிடம் கேட்டாலே அவரே திக்கி திணறி சென்றுவிடுவார்.
அந்த அளவுக்கு அந்த படத்தில் எதற்கு சண்டை காட்சிகள் வருது, எதற்கு இப்படி கூச்சலிடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு காது ஒரு பக்கம் கிழிவது மட்டுமில்லாமல் பைத்தியமே பிடிக்க வைக்கிறது. அப்படி இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்று பார்த்தவர்கள் பாதிப்படைந்த நிலையில் நிச்சயமாக அந்த படத்தை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள் என்பது ஜோதிகாவுக்கு தெரியாதா.?
அல்லது ஜோதிகா தன்னுடைய கணவர் நடித்த கங்குவா படத்தை இலவசமாகவா மக்களுக்கு திரையிட்டு காட்டினாரா.? மக்கள் அனைவரும் பணம் கொடுத்து படம் பார்க்க சென்றவர்கள், அந்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் இரண்டரை மணி ந நேரத்தையும் இழந்த கோபம் நிச்சயம் அந்த படத்தின் விமர்சனம் மூலம் வெளிப்பட தான் செய்யும். நடிகை ஜோதிகா கங்குவா படம் வெளியான பின்பு வருகின்ற விமர்சனத்திற்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளவர்.
கங்குவா படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு குறிப்பாக இந்த படம் ஹிந்தியில் வெளியிடப்பட்டது. அப்படி இருக்கும் போது மும்பையில் இருந்து கொண்டே மும்பையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ஜோதிகா. இது அவருடைய கணவருடைய படம், குறிப்பாக தன்னுடைய கணவரை தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று குடும்பத்துடன் குடியேறுனதற்கு காரணமே ஹிந்தியில் தன்னுடைய கணவரை மிகப்பெரிய நடிகராக வேண்டும் என்பதற்காக தான் ஜோதியா அழைத்துச் சென்றார்.
அப்படி இருக்கும் பொழுது ஹிந்தியில் வெளியாகும் கங்குவா படத்திற்கு ஜோதிகா ஏன் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை. மேலும் காங்குவா படம் தோல்விக்கு இதற்கு முன்பு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மேடையில் பேசிய சர்ச்சை கூறிய பேச்சு தான் காரணம் என்றும், குறிப்பாக ஜோதியா தஞ்சை பெரிய கோவிலை பற்றி சர்ச்சை கூறிய வகையில் பேசியது.
அதனை தொடர்ந்து சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தில் வட மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைத்தது, இதுதான் கங்குவா படத்தை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்று கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள் விமர்சனங்கள். காரணம் முழுக்க முழுக்க ஒரு மொக்கை படம் தான் கங்குவா.
இந்த படம் தோல்வி அடைந்ததை இதற்கு முன்பு சூர்யா ஜோதிகா பேச்சால் பேச்சுகளாலும் செயல்களாலும் உணர்வு ரீதியா பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டாடி வருகிறார்கள் தவிர திட்டமிட்டு யாரும் இந்த படத்திற்கு அவதூறு பரப்பவில்லை. அப்படியிருக்கையில் ஊர் முழுவதும் சூர்யா – ஜோதிகா இருவரும் வம்பிழுத்து வெச்சுட்டு, சரிவை சந்தித்தால் உங்களால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் கை தட்டி சிரிக்க தான் செய்வார்கள் என்கிற விமர்சனம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..