நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் விஜயகாந்த் உடலுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
சூர்யாவுக்காக பெரியண்ணா படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்திருந்தார் விஜயகாந்த். ஆனால் அந்த நன்றிக் கடன் கூட இல்லாமல் சூர்யா வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடி வருவதாக ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், அவசரமாக காரில் சென்றபடியே விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் சூர்யா, இதுவும் கடும் சர்ச்சையானது.
சூர்யாவின் தம்பி கார்த்தியோ காரைக்குடியில் தான் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்லவில்லை. இவர்களின் தந்தை சிவகுமாரும் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை, இப்படி சிவகுமார் குடும்பத்தினர் யாருமே விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாது மக்கள் மத்தியில் சிவகுமார் குடும்பத்தினருக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்த நிலையில்,
கார்த்தியும் சிவகுமாரும் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து சூர்யாவும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தை நினைத்து தேம்பி தேம்பி அழுத சூர்யா,
அண்ணனின் பிரிவு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவருடன் இன்னும் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அதிகமாக இருக்கிறது. அவரைப் போல இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியின்போது அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய இழப்பு என கண்ணீர் விட்டு கதறி சூர்யா அழுவதை பலரும் இது உலக மகா நடிப்புடா சாமி என சூர்யாவை விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். “நீ வீட்டில் இருந்து வரும்போது கிளசரின் போட்டுவிட்டு வந்து விட்டாயா? நீ அழுதால் கேப்டன் வந்து விடுவாரா என பேசி சூர்யாவை பொளந்து காட்டியுள்ளார். மேலும் விஜயகாந்துக்கு நடிகர் சூர்யா காரில் சென்று கொண்டிருக்கும்போது இரங்கல் தெரிவித்தது கூட நடிப்புதான்.
தற்போது இவர்கள் சூர்யா,சிவகுமார், காத்திக் இவர்கள் மூவரும் வந்து அஞ்சலி செலுத்த காரணம் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்லவில்லை என்றால், நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும். நம் மகன்களின் படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்கிற பயத்தில்தான் பிள்ளைகளை அழைத்து கொண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் சிவக்குமார் என தெரிவித்துள்ள பயில்வான்.
மேலும் சூர்யாவின் திருமணத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ள மாட்டேன் என கூறிய தகவலையும் நினைவு கூர்ந்துள்ள பயில்வான் ரங்கநாதன், அந்த சமயத்தில் சிவக்குமார் ஜெயலலிதா, கலைஞர், போன்ற அரசியல் தலைவர்களுக்கும் பத்திரிக்கை வைத்திருந்ததால்… அந்த திருமணத்தில் கலந்து கொண்டால் பிரச்சனை வரும் என்பதற்காக விஜயகாந்த் கலந்து கொள்ள முடியாது என கூறினார். பின்னர் ஒரு மாதம் கழித்து, சூர்யாவின் வீட்டிற்கு சென்று விலை உயர்ந்த ஒரு பொருளை கொடுத்து வாழ்த்தியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் மீது சிவகுமார் குடும்பத்தினருக்கு அப்படி என்ன கோபம், இன்று சினிமா துறையை இவர்கள் குடும்பத்தின் கட்டுக்குள் வைத்திருக்கும் இவர்கள் நினைத்திருந்தால், அணைத்து நடிகர் நடிகைகளையும் ஓன்று திரட்டி விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைத்திருக்கலாம், ஆனால் இவர்களே நேரில் வந்து அஞ்சலி செலுத்த வரவில்லையே என சிவகுமார் , சூர்யா , கார்த்திக் ஆகியோருக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.