விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா.. ரகசியத்தை உடைத்த கமல்..! என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : உலகநாயகன் என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் கமலஹாசன். அவரது நடிப்பில் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வெளிவர இருக்கும் திரைப்படம் விக்ரம். இதில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

படக்குழுவினர் சூர்யா நடிப்பது குறித்து ரகசியம் காத்துவந்தனர். ரசிகர் ஒருவர் வெளியிட்ட ஆடியோவால் சமூகவலைத்தளத்தில் இந்த தகவல் கசிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய கமலஹாசன் “சூர்யா கேரக்டரை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக கொடுக்க நினைத்தோம். ஆனால் அதுகுறித்த தகவல் வெளியே கசிந்துவிட்டது.

அதனால் மறைத்துவைக்க அவசியமில்லாமல் போனது. ஆனால் சூர்யாவின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். இந்த சூர்யா கதாபாத்திரம் பற்றி நான் கூறுகையில் இயக்குனர் லோகேஷ் இது நன்றாக உள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்தை எனது பாணியில் மெருகேற்றுகிறேன் என என்னிடம் தெரிவித்தார்” என கமலஹாசன் மனம் திறந்துள்ளார்.

மேலும் திரைப்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வரும் அந்த கதாபாத்திரம் புஷ்பா திரைப்படத்தில் பகத் பாசில் வரும் கடைசி காட்சிகள் போல மிக தரமாக இருக்கும் என திரைப்படக்குழு கூறுகிறது. மேலும் சூர்யா ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் தோன்றுவதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது என இயக்குனர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 3 ஆண்டு உலகம் முழுக்க வெளியிட தயாராக இருக்கும் இந்த விக்ரம் திரைப்படத்தை முதல்வரின் மகனும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இணைத்தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒரு பாடல் வெளியாகியுள்ள நிலையில் சில காட்சிகளும் இணையத்தில் வலம்வருகின்றன.

கமல்ஹாசனை நேரில் அழைத்து அசிங்கப்படுத்திய ராஜமௌலி..! செம்ம டென்ஷனில் கமல் என்ன செய்தார் தெரியுமா.?