சமீபத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நச்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படங்கள் உட்பட ஒரு சில படங்களை தவிர்த்து மற்ற அணைத்து படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால் தெலுங்கு நடிகர்கள் நடிப்பில் வெளியான RRR, கர்நாடக நடிகர் நடிப்பில் வெளியான KGF போன்ற படங்கள் தமிழகத்தில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. இதனால் தமிழ் சினிமா அழிவின் விழிப்பில் இருக்கிறது என்கிற விமர்சனம் கூட எழுந்தது.
தமிழ் நடிகர்கள் படங்கள் ஓடாமல் மண்ணை கவ்வி வருவதற்கு காரணம். பல நடிகர்கள் சினிமா தவிர்த்து தேவையின்றி அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வந்தது தான் என்றும், அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தங்களை எதிர்த்து கருத்து தெரிவித்து வந்ததின் விளைவு நடிகர் சூர்யாவின் படத்தை குறிப்பிட்ட ஒரு தரப்பினர் புறக்கணிக்க தொடங்கினர். இதனால் தனது மார்க்கெட்டை இழந்தார் சூர்யா.
அதே போன்று அரசியல் கட்சிகளை வம்பிழுத்தால் அதனால் வரும் எதிர்ப்பின் காரணமாக படத்திற்கு விளம்பரம் கிடைக்கும். இதனால் அந்த படம் அதிக வசூலை பெரும் என்கிற நோக்கில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடைப்பிடிக்கப்பட்ட பார்முலா தான் தமிழ் சினிமாவை பின்னோக்கி தள்ளியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பல படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான தொடர்ந்து இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இதுவரை அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் நடித்து வருகின்றவர். அவருடைய படத்தில் இரட்டை வசனங்கள் இருக்காது. கவர்ச்சிகள் அதிகமாக இருக்காது. சிறுவர்கள், பெண்கள், என அணைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் ரஜினிகாந்த் படம் இருக்கும் . அதே பார்முலாவை பின்பற்றி, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவும், எதிராகவும் இல்லாமல் தனது சினிமா அணைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிவகார்த்திகேயன்.
தற்பொழுது ரஜினி, விஜய், அஜித் அடுத்த படியாக தமிழ் சினிமாவில் நான்காவது இடத்தில் உள்ளார். நடிகர் சூர்யா,தனுஷ் போன்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி சிவகார்த்திகேயன் முன்னேறி சென்றதற்கு காரணம் அவரின் கவனம் சினிமாவில் மட்டும் இருந்தது தான் என்றும், அதே போல் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் தோல்விக்கு சூர்யாவின் வாய் கொழுப்பு தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்மறை விமர்சனங்களால் கிடைக்கும் விளம்பரத்தை நம்பி சூர்யா போன்ற நடிகர்கள் மண்ணை கவ்வி தொடர் தோல்வியை சந்தித்து வருவதை தவிர்க்க. சிவகார்த்திகேயன் போன்று சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினால் சினிமாவில் வெற்றி பெறலாம், இது தான் தமிழக மக்களின் தீர்ப்பும் என்பது சமீபகால சினிமா படங்களின் வெற்றி, தோல்விகள் உணர்த்துவது குறிப்பிடத்தக்கது.