சிவகுமார் பேசியதை அவரே பின்பற்றவில்லை.. இஷ்டத்துக்கு பேசுவதா.. வெளுத்து வாங்கும் மக்கள்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக, மரியாதையை கூறியவராக பார்க்க கூடியவர் நடிகர் சிவகுமார், சினிமாவில் மிக ஒழுக்கமான நடிகராக எந்த ஒரு கிசு கிசுவில் சிக்காத ஒரு நடிகர் சிவகுமார். இப்படி சினிமாவில் இருப்பவர்கள் சிவகுமார் மாதிரி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என சொல்லும் அளவுக்கு முன்னூதாரணமாக இருக்க கூடிய சிவகுமார் கடந்த சில வருடங்களாகவே கையில் மைக் கிடைத்தால் போதும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவிடுவார்.

மேலும் பல மேடைகளில் சமூக அக்கறை, சமூகநீதி என்று பாடம் எடுக்க கூடிய நடிகர் சிவகுமார், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில், கோவில்களில் தீண்டாமை இருப்பதாக பேசியவர், மேலும் கோயிலில் இன்னமும் தீண்டாமை உள்ளது. ஏழை, பணக்காரன் பாகுபாடு கோயில்களில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடி கோடியாக காணிக்கை கொட்டுகிறது.

காட்பாடியிலிருந்து 48 நாள் விரதமிருந்து, நடந்தே திருப்பதி கோயிலுக்கு செல்கிறான் ஒரு ஏழை பக்தன் இவன் நீண்டவரிசையில் காத்திருந்து நான்கு நாட்கள் வரிசையில் நின்று பின்னர் தான் சாமியை தரிசனம் செய்கிறான். அங்கு பெரிய மூங்கில் குச்சியில் ‘ஜரகண்டி.. ஜரகண்டி’ எனஅடித்து விரட்டுகிறார்கள்.

அதுவே ஒரு பணக்காரன் தன் மனைவிக்கு தெரியாமல் வேறு இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு திருமலைக்கு சென்று விடுதியில் தங்கி, தண்ணி அடித்து, சந்தோசமாக இருந்து விட்டு காலையில் குளிக்காமல் கோவிலுக்குள் சென்றால் அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. நான் கண்ணால் பார்த்ததை சொல்கிறேன் ” என இதற்கு முன்பு சிவகுமார் கோவில்களில் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு இருப்பதாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் கோவில்களில் பணக்காரன், ஏழை பாகுபாடு இருப்பதாக மேடையில் இதற்கு முன்பு ஆக்ரோஷமாக பேசிய சிவகுமார், சமீபத்தில் சூர்யா, ஜோதிகா உட்பட அவரது குடும்பத்தினருடன் மதுரை கீழடியில் உள்ள அருங்காட்சியத்திற்கு சென்று இருந்தார். தமிழர்களின் பெருமையை நிலைநாட்டும் வகையில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் கீழடியில் பிரம்மாண்டமான அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காலை முதல் மாலை வரை நுழைவுகட்டனம் செலுத்தி பார்வையிடலாம், தினமும் பெரும்பாலான பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்டு செல்கிறார்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பார்வையிட்டு செல்கிறார்கள், இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி நடிகர்கள் சூர்யா, சிவகுமார், ஜோதிகா அவர்களது குடும்பத்தினர் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கீழடி அருங்காட்சியம் உள்ளே சென்று சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

சிவகுமார், சூர்யா மற்றும் குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியத்தில் உள்ளே சென்று பார்வையிடுவதால், அங்கே அருகாட்சியம் சென்று பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், அருகாட்சியத்தின் நுழைவு வாயில் கேட் அடைக்கப்பட்டிருந்தது.இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் பல மணிநேரம் கடும் வெயிலில் காத்திருந்துள்ளனர்.

இந்த நிலையில் சிவகுமார் குடும்பம் கீழடி அருகாட்சியம் வந்த காரணத்தினால், தனி ஒரு குடும்பத்திற்காக மாணவர்களும் ,பொதுமக்களும் உள்ளே சென்ற சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வரும் வரை கடும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்த நிகழ்வு சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில் இதற்கு முன்பு திருப்பதி கோவிலில் பணக்காரன், ஏழை பாகுபாடு இருப்பதாக மேடையில் முழங்கிய சிவகுமார் தற்போது அந்தர் பல்டி அடிக்கும் விதமாக அதே பாகுபாடை கீழடியில் பின்பற்றுவது தான் சமூக நீதியா என கேள்வி எழுப்பும் மக்கள், மேடையில் உணர்ச்சி போங்க பேசும் சிவக்குமார், அவர் பேசுவதை முதலில் அவர் பின்பற்ற வேண்டும், வடிவேலு நகைசுவை காட்சிகளில் வருவது போன்று இது வேற வாய், அது நாற வாய் என்கிற காமெடி காட்சிகளில் வருவது போன்று மேடையில் ஒன்றை பேசிவிட்டு செயலில் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்ள கூடாது என சிவகுமார் க்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.