சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பதால் தமிழகத்தில் இப்படி ஒரு படம் வந்தது கூட சாமானிய மற்றும் கிராமங்களில் வசிக்கும் பலருக்கு தெரியாது. இருந்தும் ஒடிடி தளத்தில் விரும்பி படம் பார்க்கும் மக்கள் மட்டுமே இந்த படத்தை பார்த்துள்ளனர், இதனால் இந்த படம் குறித்த பிரச்சனை பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
இந்நிலையில் உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஜெய்பீம் படத்தில் வரும் மற்ற அணைத்து கதாபாத்திரத்துக்கு உண்மையான பெயரில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை சம்பவ விவகாரத்தில் மிக கொடூரமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் அந்தோனிசாமி என்பவர் தலித் சமூகத்தை சேர்ந்த கிறிஸ்துவர் என கூறப்படுகிறது. ஆனால் இவர் பெயரை படத்தில் குருமூர்த்தி என படத்தில் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இவர் இடம்பெறும் காட்சிகளில் சில குறியீடுகள் மூலம் கொடூரமான காவல் ஆய்வாளரை வன்னியர் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக அவர் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி சட்டி புகைப்படம் இடம்பெற்றுள்ளது வன்னியர் சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் படத்தின் இயக்குனர் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யா ஆகியோருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடும் எதிப்புக்கு பின் சர்ச்சைக்குரிய வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள அக்னி சட்டி புகைப்படத்தை மாற்றி விட்டு இந்துக்கள் வழிபடும் பெண் தெய்வமான லக்ஷ்மி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இது ஒட்டு மொத்த இந்துக்களையும் சீண்டும் விதத்தில் அமைத்துள்ளதால், இந்த விவகாரம் மேலும் சர்ச்சையாக வெடித்துள்ளது, குற்றவாளியாக சொல்லப்படும் அந்தோனிசாமி ஒரு கிறிஸ்துவர்.
ஆனால் அவர் வீட்டில் இருக்கும் காலண்டரில் இந்து தெய்வமான லக்ஷ்மி படத்தை போட்டு அவரை இந்துவாக காட்டியுள்ளது. ஜெய் பீம் பட குழுவினர் இதுவரை ஒரு சாதியை சேர்ந்தவர்களை சீண்டி வன்மத்தை வித்திருந்தார்கள் ஆனால் தற்போது ஒட்டு மொத்த இந்து மதத்திற்கு எதிராக வன்மத்தை விதைத்துள்ளார் என கருத்துக்கள் பதிவு செய்யபட்டு வருகிறது. இதெல்லாம் எங்கே போய் முடிய போகிறது என்பதை ஜெய்பீம் படக்குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.