தமிழ் சினிமாவுக்கு இம்முறை 10 தேசிய விருதுகள் கொடைத்துள்ளது, தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு மட்டும் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அப்படியானால் சூர்யாவின் உண்மையான திறமையின் அடிப்படையில் இந்த விருது கிடைக்கவில்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தேன் என்கின்ற தமிழ் படமும் தேசிய விருதுக்கான போட்டியில் பங்கேற்று பங்கேற்று இருந்துள்ளது. படத்தை பார்த்த தேசிய விருது குழுவினர் அந்த படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு உங்களுடைய முழு விவரத்தையும் சமர்ப்பிங்கள், உங்களுடைய படம் நன்றாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் இந்த படத்திற்கு விருது கிடைக்காமல் போனதற்கு காரணம் நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தான் என்றும் கூறப்படுகிறது.
அதாவது தேன் படத்தில் முதலில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க தங்கதுரையை அந்தப் படத்தின் இயக்குனர் அணுகியுள்ளார்.ஆனால் புதுமுக இயக்குனர் என்பதால் கதை கூட கேட்காமல் அதெல்லாம் முடியாது என புறக்கணித்துள்ளார் தங்கதுரை. இதனை தொடர்ந்து இயக்குனர் நேரடியாக நடிகை தமன்னாவை சந்தித்து கதையை தெரிவிக்க, அந்த கதை தமன்னாவுக்கு மிகவும் பிடித்து போனது .
உடனே படத்தின் நடிக்க சம்மதம் தெரிவித்த தமன்னா சம்பளத்தை தங்கதுரையிடம் பேசிக் கொள்ளுங்கள் என அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தங்கதுரை இந்த ப்ராஜெக்ட்டை எவ்வளவு எடுக்க முடியுமோ, அவ்வளவு கெடுத்து நடிகை தமன்னாவை நடிக்க விடாமல் செய்துவிட்டார் என்று தேன் படத்தின் இயக்குனர் தரப்பில் குற்றம் சாட்டுகள் இருந்த நிலையில். தேசிய விருது தேர்வு குழுவில் இடம்பெற்றிருந்த நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை பல தில்லாலங்கடி வேலை செய்துள்ளார்.
தங்கதுரையின் வன்மம் தான் தேன் படத்திற்கு தேசிய விருது கிடைத்துவிடாமல் செய்துவிட்டார் என்றும். அவருடைய கடுமையான அழுத்தத்தினால் சூரரைப் போற்று படத்திற்கு 5 விருதுகளை பெற்று தந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. சூரரைப் போற்று திரைப்படம் முக்கியமான கேட்டகிரியில் ஐந்து விருதுகள் பெற்றுள்ளது. இதற்கு காரணம் நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேசிய விருது தேர்வு குழுவில் இடம் பெற்றது தான் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர் சூர்யா தொடர்ந்து மத்திய அரசை விமர்சன செய்து வரும் நிலையில் அவர் நடித்த படத்திற்கு 5 விருதுகளை அள்ளிக் கொடுத்து அவர் வாயை அடைக்க மத்திய அரசு வழங்கியுள்ளது என கூறப்பட்டாலும், மண்டேலா படத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்யப்பட்ட வசனங்கள் காட்சிகள் இடம் இருந்தது, ஆனால் மண்டேலா படத்திற்கும் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.