முக்கிய விமான நிலையங்களில் சூர்யா என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.? தொழில் அதிபரான சூர்யா..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் சூர்யா, சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே சூர்யாவுக்கு தொழில் தொடங்கி தொழிலதிபராக வேண்டும் என்கின்ற ஆசை இருந்துள்ளது. அதனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கொங்கு மண்டலத்தில் கார்மெண்ட்ஸ் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளார் சூர்யா.

தொடர்ந்து தொழில் மீது கவனம் செலுத்துவதாக இருந்த சூர்யா எதோ ஒரு காரணத்தினால் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். சினிமாவில் அவரது உயரம் அவருக்கு மிக பெரிய குறையாக இருந்து வந்தது. இருந்தும் கடுமையான போராட்டத்திற்கு பின்பு, பாலா இயக்கிய நந்தா படத்தின் மூலம் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று அடுத்தடுத்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றவர் நடிகர் சூர்யா.

நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. மனைவியுடன் இனைந்து சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கிய சூர்யா அதன் மூலம் பெரும் லாபத்தை சம்பாரித்தார். சினிமா என்பது தற்காலிக வருமானம் தான் அதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியின் ஆலோசனை படி சினிமாவில் சம்பாரிக்கும் பணத்தை முதலீடு செய்து மேலும் பணம் சம்பாரிப்பது சூர்யாவின் குறிக்கோளாக இருந்து வந்துள்ளது.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட மனைவி ஜோதிகா மூலம் மும்பையை சேர்ந்த பெரும் தொழில் அதிபர்கள் சூர்யாவுக்கு அறிமுகமானார்கள். அதன் அடிப்படையில் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை மும்பையில் பலகோடி முதலீடு செய்த சூர்யா, அதன் மூலம் மாதம் சுமார் 20 கோடி வரை லாபம் சம்பாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பொள்ளாச்சியில் சூர்யாவுக்கு சொந்தமான காற்றாலை உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா பற்றிய இன்னொரு தொழில் குறித்து தகவல் ஓன்று வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில், அதாவது சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை ஆகிய விமான நிலையங்களில் உள்ள கார் பார்க்கிங் காண்ட்ராக்ட் சூர்யா எடுத்து அதன் மூலம் பல கோடி சம்பாதித்து வருவதும் தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள முக்கிய புள்ளிகள் மூலம் தான் விமான நிலையம் காண்ட்ராக்ட் சூர்யா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா சினிமாவில் சம்பாதிப்பதை விட, வெளியில் முதலீடு செய்து சம்பாரிப்பது தான் அதிகம் என கூறப்படுகிறது.

மணிரத்தினத்திற்கே நம்பிக்கை இல்லை…  பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் பரிதாபம் என்ன தெரியுமா.?