தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 71 வயதிலும், இன்றும் அவர் தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகர், சுமார் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் மவுசு குறையவில்லை, இது எப்படி என்பது சினிமா துறையை சேர்ந்த மற்ற நடிகர்களுக்கும் ஆச்சரியம்.
கடந்த 2011ம் ஆண்டு உடல்நல குறைவினால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களின் பிராத்தனையில் பலனாக மீண்டும் மறு பிறவி எடுத்து தமிழகம் திரும்பினார். சிகிச்சைக்கு பின்பு ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க மாட்டார், ஓய்வு பெறப்போகிறார் என்கிற தகவல் வெளியான நிலையில், சுமார் நான்கு வருடத்துக்கு பின்பு திரையில் லிங்கா, கோச்சடையான் படத்தில் தோன்றினார் ரஜினிகாந்த்.
இரண்டு மகள்களின் வற்புறுத்தலின் காரணமாக தான் ரஜினிகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடக்கியதாக கூறப்படுகிறது. வீட்டிலே இருந்தால் உங்களுக்கு போர் அடிக்கும், படப்பிடிப்பில் கலந்து கொண்டால் உங்களுக்கு மன அழுத்தம் இருக்காது, என மகள்கள் அறிவுதலின் பேரில் மீண்டும் நடிக்க வந்தார் ரஜினிகாந்த், அவர் நடிக்கும் படத்தின் சம்பளத்தை இரண்டு மகள்களும் சரி பாதியாக பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு படத்தின் சம்பளம் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு என்றால், அடுத்த படத்தின் சம்பளம் இரண்டாவது மகள் சௌந்தர்யா என இருவரும் அவர்களுக்குள் ஒப்பந்தம் போட்டு அப்பாவை ஓய்வு இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்து வந்தனர். இந்நிலையில் அண்ணாத்தே படத்திற்கு பின்பு தற்பொழுது தொடங்கி ஒவ்வொரு படத்தின் வாங்கும் சம்பளத்தை சரி பாதியாக பிரித்து கொள்வோம் என இரண்டு மகள்களும் முடிவெடுத்துள்ளதால் ஜெயிலர் படத்தின் சம்பளம் இரண்டு மகள்களுக்கு சரி பாதியாக செல்ல இருக்கிறது.
இந்நிலையில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் தந்தையின் வருமானத்தில் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் இரண்டு மகள்களும்,தந்தையை வைத்து எவ்வளவு பணம் சேர்க்க முடியுமா சேர்த்து வைத்து கொள்வோம் என்கிற திட்டத்தில் கோடி கோடியாக பணத்தை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தற்பொழுது எடுத்துள்ள அதிரடி முடிவு, அவருடைய இரண்டு மகள்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்பொழுது நடிக்கும் ஜெயிலர் படத்தை மிக பிரமாண்டமாக, அணைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்பியதால், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் உடன் மற்றொரு இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இருவரும் இணைந்து பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் இரண்டு இயக்குனர்களிடம் நேரடியாக பேசிய ரஜினிகாந்த், இந்த படம் தான் என்னுடைய கடைசி படம்.
இந்த படம் அணைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளார் ரஜினிகாந்த், மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உடன் நெருக்கிய நட்பில் இருக்கும் ரஜினிகாந்த், அவரிடம் தனியாக தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். அதில் தன்னுடைய உடல் நலன் கருத்தில் கொண்டு இனி அடுத்தடுத்து என்னால் படம் நடிக்க முடியாது மேலும் இனி தான் முழு நேரம் ஓய்வு எடுக்கவும், எனக்கான வாழ்க்கையை வாழ இருப்பதாகவும் தெரிவித்த ரஜினிகாந்த்.
ஜெயிலர் படம் முடிந்த பின்பு, இந்தியாவில் எனக்கு பிடித்த, மனநிம்மதி கொடுக்கும் இடங்களுக்கு சென்று அங்கே நேரம் செலவு செய்வது, கர்நாடகாவில் இருக்கும் என்னுடைய நண்பர் மற்றும் என்னுடைய சகோதரர்களுடன் நேரத்தை செலவு செய்வது என திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ரஜினிகாந்த், ஆகையால் இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என ரஜினிகாந்த் தன்னுடைய முடிவை கே.எஸ்.ரவிகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்பா ரஜினிகாந்த் எடுத்த இந்த அதிரடி முடிவு அவருடைய இரண்டு மகள்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பா தற்பொழுது நடிக்கும் ஜெயிலர் படம் மிக பெரிய ஹிட் கொடுக்கும், இதன் பின்பு அப்பாவின் சம்பளம் மேலும் உயரும், அந்த சம்பள தொகையில் இருவரும் பிரிப்பதில் கிடைக்கும் பணம் எவ்வளவு என அடுத்தடுத்து ரஜினிகாந்தை நடிக்க வைத்து மேலும் கோடிகளை குவிக்கலாம் என திட்டமிட்ட இரண்டு மகள்களும் அப்பா சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் முடிவினால் தேம்பி தேம்பி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.