மாடு மாதிரி உழைத்தேன்..ஆனால்.. ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண் கொடுத்த பகீர் தகவல்..

0
Follow on Google News

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி, இவர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நீண்ட வருடமாக வேலை செய்து வந்தவர், அங்கே சிறுக சிறுக திருடி வந்துள்ளார். 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை ஈஸ்வரி விற்றது தெரியவந்தது.

அதில் கிடைத்த பணத்தில் சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் போலீசார் மீட்டனர். இந்நிலையில் ஈஸ்வரியின் திருட்டு சம்பவத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாக ஈஸ்வரி அவரது கணவரிடம் தெரிவித்தவர். மேலும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு, நகை திருட்டு சம்பவத்தில் கணவருக்கே விபூதி அடிக்கும் வகையில் ஒரு கதையை குடும்பத்தினர் மத்தியில் அரங்கேற்றியுள்ளார் ஈஸ்வரி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தன்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான் என்கிற பகீர் தகவலை தெரிவித்துள்ளார் வேலைக்கார பெண் ஈஸ்வரி.

விசாரணையின் போது ஐஸ்வர்யா வீட்டில் மாடு மாதிரி உழைத்த எனக்கு, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை ஐஸ்வர்யா அதனால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் ஈஸ்வரி.அந்த திருட்டுகளை ஐஸ்வர்யா கண்டுபிடிக்காததால், பின்னர் நகைகளை திருட தொடங்கியதாகவும், அதை வைத்து தான் வீடு வாங்கியதாக தெரிவித்த ஈஸ்வரி.

மேலும் இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் நிறைய திருடி இருப்பேன் எனவும் கூறி இருக்கிறார். நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன். இது தான் தன்னை திருட தூண்டியதாகவும் போலீஸ் விசாரணையில் ஈஸ்வரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். விசாரணையின் போது எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என போலீஸ் கேட்டதற்கு மாதம் 30 ஆயிரம் தான் கொடுத்தார்கள் என்று தெரிவித்த ஈஸ்வரி. அந்த பணம் போதுமானதாக இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.