ரஜினிகாந்த் பற்றிய ரகசியத்தை போட்டு உடைத்த அவரது மகள்..அதிர்ச்சியில் ரசிகர்கள்.! இவரையா தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீகள்.?

0
Follow on Google News

45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக ‘தாதா சாஹேப் பால்கே’ விருது வழக்குவதற்கு முந்தைய நாள், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவீட்டர் பக்கத்தில் ‘தாதா சாகேப் விருது பெருவதில் மகிழ்ச்சி. நாளை எனக்கு இரண்டு முக்கியான நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. ஒன்று விருது வாங்குவது இனியொன்று எனது இரண்டாவது மகள் உருவாக்கியுள்ள Hoote செயலியை தொடங்கி வைப்பது’ என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் உருவாக்கியுள்ள இந்த செயலி 60 வினாடி ஆடியோக்களை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தனது வாழ்த்து குரல் பதிவின் மூலம், இந்த செயலியை தொடங்கி வைத்தார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் Facebook, Instagram, twitter போல இந்த hoote செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று Hoote என்ற செயலியை சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். வணிக தலைவரான சன்னி போகாலாவுடன் இணைந்து இந்த செயலியை அவர் வெளியிட்டார். அப்போது பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போலல்லாமல் யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சவுந்தர்யா ரஜினிகாந்த், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்

மேலும் ‘அப்பா முன்பு கட்சி தொடங்குவது தொடர்பாக ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்பினார். அப்பொழுது பிறந்த யோசனை தான் hoote செயலி. அப்பாவுக்கு நன்றாக தமிழ் படிக்க தெரியும். ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன்.
அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்று கூறியதால் தமிழ்நாடு மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை’ என்று சௌந்தர்யா தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழ் எழுத தெரியாது என அவர் மகள் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தமிழ் எழுத தெரியவில்லை என்றால், தமிழ் வாசிக்கவும் தெரிந்திருக்காது எனவே ரஜினிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருக்காலாம், இந்நிலையில் தமிழ் எழுத தெரியாத ரஜினிகாந்துக்கு தமிழில் இந்தனை வருடமாக எழுதிய ரசிகர்கள் கடிதத்தை எப்படி படித்திருப்பார் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருப்பது குறிப்பிட தக்கது.

மேலும் தனக்கு தமிழ் எழுத தெரியாத காரணத்தினால் கூட தன்னை முதல்வர் வேட்பளராக ரஜினி புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்த பொது முன்னிலை படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று, தமிழ் எழுத தெரியாத ஒருவரை தான் அவரது ரசிகர்கள் தமிழ்நாட்டை தலைமையேற்று நடத்த வா தலைவா என அழைத்தார்களா என்று பொது தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.?