என் கண்முன்னே நிற்காதே…. ரஜினிகாந்த் சர்ச்சை… இயக்குனரை டோஸ் விட்டு விரட்டிய விஜய்..

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது, ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பிரச்சனை மிக பெரிய விவாத பொருளாக மாறி, ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை சொல்லி விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமைத்திருந்தது ரஜினியின் பேச்சு.

இதனை தொடர்ந்து ரஜினியின் காக்கா கழுகு கதைக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்க பட்டது, இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பிரச்ச்னைக்கு பதில் தரும் விதத்தில் லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், மக்கள் திலகம் என்றால் ஒருவர்தான். நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான். உலகநாயகன் என்றால் ஒருவர்தான். சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான்.

தல என்றால் ஒருவர்தான். நான் தளபதியாக இருக்கிறேன். மக்களாகிய நீங்கள்தான் மன்னர்கள். நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்வேன் என சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர் தான் என இதுவரை தொடர்ந்து வந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து, இதுவரை சூப்பர் ஸ்டார் பிரச்சனையால் ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்து வந்த கடும் எதிர்ப்புகளை பாராட்டுகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்வது போன்று அமைத்திருந்தது விஜய்யின் இந்த பேச்சு.

அதாவது, விரைவில் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால், ரஜினி, அஜித் என அனைத்து ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான், தல என்றால் அது ஒருவர் தான் என பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்தார். ஆனால் லியோ வெற்றி விழாவில் பேசிய இயக்குநரும் லியோ படவசனகர்த்தாவுமான ரத்னகுமார், “விஜய்க்கு நான் நெஞ்சை அறுத்துக்கூட கொடுத்து விடுவேன். அந்தளவு எனக்கு அவர் மீது பாசம் இருக்கிறது என பேசியவர்.

மேலும் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும் ரஜினியை சீண்டும் வகையில் கழுகு எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும் என ரத்தினகுமார் பேசியது ரஜினி – விஜய் விவகாரத்தை மீண்டும் பெருசு படுத்துவது போன்று அமைத்திருந்தது. இந்நிலையில் விஜய் வேறு ஒரு பிளானோடு அதாவது ரஜினி விவாகரத்துக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் லியோ விழாவில் பேச வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார்.

ஆனால் ரத்னகுமார் அப்படி பேசியதை விஜய்யே எதிர்பார்க்கவில்லை. விஜய் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக, ரத்தினகுமார் பேசிய இந்த பேச்சால் அரங்கத்தில் விசில் சத்தமும் கைத்தட்டல்களும் அதிகமாகவே இருந்தன. அனாலும் விஜய்க்கு பெரும் கோபத்தை இது ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. உடனே அந்த அரங்கத்திலே டென்ஷனில் இங்கிருந்து ரத்தினகுமாரை கிளம்ப சொல்லியிருக்கிறார் விஜய்.

மேலும் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் சரத்குமார் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து பேசி என்னை வம்பில் மாட்டிவிட்டு சென்று விட்டார், இப்ப ரத்தினகுமார் மேலும் என்னை சிக்கலில் சிக்க வைக்கும் வகையில் பேசுவதா என டென்ஷனான விஜய், தன்னுடைய உதவியாளரிடம், இனிமேல் ரத்தினகுமார் மூஞ்சிலே நான் முழிக்க கூடாது, என்னை பார்க்க வந்தா கூட அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்து விட்டாரார் விஜய் என கூறப்படுகிறது.