மன்சூர் அலிகான் போன்று ரஜினி மீதும் நடவடிக்கையா..? திரிஷா விவகாரம் வெடிக்கும் அடுத்த சர்ச்சை…

0
Follow on Google News

சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்து, தமிழ் சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் லியோவில் த்ரிஷாவுடன் ரேப் சீன் இல்லையென்று லியோ வெற்றி விழா மேடையிலேயே மன்சூர் அலிகான் பேசிய போது த்ரிஷாவும், அரங்கத்தில் இருந்த அனைவருமே குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

அதே போன்று ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமன்னாவுடன் ஆட முடியவில்லை என பேசிய போது, அங்கே இருந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிந்தனர். மேலும் நடிகர் ராதாரவி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஹிந்தி தெரிந்திருந்தால் ஹிந்தியில் நடித்து ஐஸ்வர்யா ராயை ரேப் பண்ணி நடித்திருப்பேன் என்று ராதாரவி பேசியபோது அங்கே இருந்தவர்கள் குலுங்கி குலுக்கி சிரித்தனர்.

இதே போன்று பல மேடைகளில் அநாகரிகமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளனர் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள். அப்போதெல்லாம் அவர்கள் பேசிய பேச்சை கைதட்டி குலுங்கி குலுங்கி சிரிந்தவர்கள், சமீபத்தில் லியோ படத்தில் ரேப் சீன் இல்லை என்று மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் குறிப்பாக சினிமா துறையினர் பொங்கி எழுந்து வருகிறார்கள்.

இதில் மன்சூர் அலிகான் பேசியது மிக கேவலமான அருவருக்கத்தக்க பேச்சு என்பதை மறுக்க முடியாது, ஆனால் ரேப் சீன் இருந்திருக்கலாம் என்று மன்சூர் அலி கான் பேசியது பெண்ணியத்தை கேவலப்படுத்தும் பேச்சு என்றால, இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இடம்பெற்ற ரேப் சீன்களெல்லாம் பெண்ணியத்தை கெளரவப்படுத்தும் செயலா ? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.

நடிகைகள் பணத்திற்காக கவர்ச்சி காட்டி நடிக்கும் சினிமா துறையில், அதாவது பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக காட்சி படுத்தும் சினிமா துறை தான், பெண்ணியத்தை இழிவு படுத்துவதில் முதன்மையாக இறக்கிறது என்கிற கேள்விக்கு சினிமா துறையினர் மத்தியில் இருந்து பதில் கூறுவார்களா.? என்கிற கேள்வி பொது தளத்தில் அழமாக வைக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் இது வரை தமிழ் சினிமாவில் ரேப் சீன்களில், படு கேவலமான, அதாவது குடுப்பதுடன் பார்க்க முடியாத காட்சிகளில் நடித்த நடிகர், நடிகைகள், அந்த காட்சியை எடுத்து இயக்குனர் என அனைவருமே பெண்ணியத்தை கேவலப்படுத்தியவர் தான் என்பதை, இன்று மன்சூர் அலிகான் விவகாரத்தில் பொங்கி எழுந்துள்ள சினிமா துறையினர் ஒப்பு கொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய அருவருக்கத்தக்க பேச்சு கண்டிக்க தக்கது என்றாலும் கூட, சினிமா துறையினர் இந்த விவகாரத்தில் கொந்தளிப்பது தான், யோக்கியன் வருகிறான் செம்ப எடுத்து உள்ள வைங்கப்பா என்று சொல்வது போல், தொடர்ந்து வியாபாரத்துக்காக பொன்னியத்தை ஒரு கவர்ச்சி பொருளாக காட்டி வரும் சினிமா துறையினர் கண்டிப்பது மிக பெரிய கேலி கூத்தாக உள்ளது.

ரஜினி, ராதா ரவி, மன்சூர் அலி கான் உட்பட பல நடிகர்கள் சினிமா நிகழ்ச்சியில் பேசியது போல் பல மேடைகளில் பல நடிகர்கள் பேசியுள்ளனர். அப்போதெல்லாம் சிரிப்பாக பார்க்கப்பட்ட விவகாரம் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டியின் மூலமா பூதாகரமாகியுள்ளது. இந்த விவகாரத்தால் மிக சீரியசாக கையாலும் சினிமா துறையினர், இனி தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்சிகள், படுக்கையறை காட்சிகள், ரேப் சீன்கள் இருக்க கூடாது என குரல் கொடுப்பார்களா.? என்கிற கேள்விக்கு சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.