தமிழ் சினிமாவில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்கிற நாற்காலியில் நிரந்தரமாக அமர்ந்திருக்கும், நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் ஒரு நடிகராக இருந்தாலும், நிஜத்தில் அவருக்கு நடிக்க தெரியாது என்று சொல்லும் அளவுக்கு மேடைகளில் எதார்த்தமாக பேச கூடியவர், அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது தான் முக்கியம், நாம் நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம், ஆகையால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம்.
இல்லை என்றால் மகிழ்ச்சியாக மருத்துவமனை செல்லாமலே நடமாடிக் கொண்டிருக்கும் போதே போய் சேர்ந்து விட வேண்டும். நான் கூட இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தவன், எனக்கு பணம் புகழ், பெயர் என மிக பெரிய உச்சத்தில் இருந்தாலும், பெரிய பெரிய அரசியல் தலைவர்களை பார்த்த இருந்தாலும், சந்தோஷம், நிம்மதி என் வாழ்க்கையில் பத்து சதவீதம் கூட இல்லை, ஏனென்றால் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது என ரஜினிகாந்த் பேசியபோது அந்த அரங்கில் இருந்தவர்கள் கண் கலங்கியதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த 16 வயதிலே படத்தில் இயக்குனர் கே.பாக்கியராஜ் சிபாரிசில் பாரதிராஜா, கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்கும் போது ரஜினி – கவுண்டமணி இடையில் நெருக்கமான நட்பு உருவாகியுள்ளது.இருவருக்குமே அது சினிமாவின் ஆரம்ப கட்டம் என்பதால் சகஜமாக பழகி வந்துள்ளனர்.
அந்த காலகட்டத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்பு நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவரையும் காரில் அழைத்து சென்று அவர்களின் வீட்டில் விடும்போது முதலில் முக்கிய நடிகர்கள் கடைசியாக துணை நடிகர்கள் என வாகனத்தில் ஏற்றி செல்வார்கள், ஒரு முறை கவுண்டமணி நீண்ட நேரம் காத்திருந்தும் வாகனத்தில் அமர இடம் கிடைக்கவில்லை.
இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார் கவுண்டமணி, அப்போது காரில் 5 பேர்களுடன் வந்த ரஜினி அவரும் கவுண்டமணி உடன் சேர்ந்து நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது காரில் இடம் கிடைக்காதது பற்றி கவுண்டமணி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த், கவலை படாதீங்க அண்ணா, எதிர்காலத்தில் 7 கார் வாங்கி தினமும் ஒரு காரில் வருவீர்கள் என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
அதே போன்று ரஜினிகாந்த் மிக பெரிய நட்சத்திரமாக உயர்ந்த பிறகு, மன்னன் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி இருவரும் நடிக்கும் போது ரஜினியை வழக்கம் போல் வாயா … போய.. என்று பேசியுள்ளார் கவுண்டமணி. இதற்கு இயக்குனர் வாசு அப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் பேச கூடாது, அவர் இன்று மிக பெரிய சூப்பர் ஸ்டார், அவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என வாசு கவுண்டமணியிடம் பேசி கொண்டிருப்பதை கவனித்து கொண்டிருந்த ரஜினி அருகில் வந்துள்ளார்.
அப்போது கவுண்டமணி அண்ணன் எப்போதும் போன்று பேசட்டும், படத்திலும் அண்ணன் அப்படி பேசுவது தான் சரியாக இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் மிக பெரிய உயரத்துக்கு ரஜினி சென்றாலும் கூட ஆரம்பக்கட்டத்தில் எப்படி பேசினாரா அப்படியே கவுண்டமணி பேசட்டும் என ரஜினியின் பெருந்தன்மை பலரை வியப்படைய வைத்துள்ளது. அப்படி ஒரு மனிதரின் 73 வது பிறந்தநாளில் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ நாமளும் கமெண்ட்ல் வாழ்த்துக்களை பதிவு செய்யலாமே.?