கல் நெஞ்சம் படைத்த லதா ரஜினிகாந்துக்கு கடவுள் கொடுத்த தண்டனை..! அவங்க வயித்தெரிச்சல் தான் காரணம்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் பற்றிய அரக்ககுணம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரஜினிகாந்தை வைத்து கோடி கோடியாக எப்படி பணம் சம்பாரிக்க வேண்டும் என்று திட்டமிடும் லதா ரஜினிகாந்த், அந்த பணத்தை வெளியில் எடுக்க மனம் இல்லாத கல் நெஞ்சம் படைத்தவர் என்பது, இவர் ஈவு இரக்கமின்றி பலர் வயிற்றில் அடித்த சம்பவங்கள் உறுதி படுத்தியுள்ளது.

ஆசிரமம் பள்ளி ஒன்றை நடத்தி வரும் லதா முறையாக வாடகை செலுத்துவது கிடையாது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அசிங்கப்பட்ட பின்பு தான் வாடகை பாக்கியை செலுத்தினார் லதா ரஜினிகாந்த. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா தொற்றை காரணம் காட்டி, ஆசிரமம் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டிரைவர் என யாருக்குமே சம்பளம் தரவில்லை என கூறபடுகிறது,

இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ஊழியர்கள், ரஜினிகாந்த் மனைவி லதாவை பலமுறை சந்தித்து தாங்கள் படும் சிரமத்தை எடுத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சுமார் ஒரு வருடத்துக்கு மேல் கொரோனாவை காரணம் காட்டி தொழிலார்களின் சம்பள பாக்கியை லதா தரவில்லையாம், ரஜினிகாந்த் ஒரு படத்துக்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில், அவரது மனைவி நடத்தும் ஆசிரமம் பள்ளியின் மொத்த ஊழியர்களின் ஒரு வருட சம்பளம் சுமார் 50 லட்சம் தான் என்றும்.

இதை கூட கொடுக்க மனமில்லாமல் கல் நெஞ்சத்துடன் லதா ரஜினிகாந்த் நடந்து கொண்டது தொழிலார்கள் வயிற்றில் அடித்த செயல் என்று பலர் விமர்சனம் செய்தனர். அதே நேரத்தில் ரஜினிகாந்த் இரண்டு மகள்களில் இரண்டாவது மகள் கோச்சடையான் என்கிற அனிமேஷன் படம் இயக்கியதில் பல கோடி நட்டம் ஏற்பட்டது, அதே போன்று முதல் மகள் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் தயாரித்து அது வரவேற்ப்பு இல்லாமல் பணம் நஷ்டம் தான்.

மேலும் இரண்டு மகள்களும் இயக்குனராக 3, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்கள் சொந்த தயாரிப்பு என்பதால் ரஜனிகாந்த் குடும்பத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இப்படி கல் நெஞ்சம் படைத்து உழைத்த தொழிலார்களுக்கு சம்பளம் கொடுக்காமல் அவர்களின் வயித்தெரிச்சல் தான் இப்படி மகள் மூலம் பல கோடி ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றும், இது கல்நெஞ்சம் கொண்ட லதாவுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

வீட்டு பக்கம் வரவே கூடாது.. அனிருத்தை விரட்டியடித்த ரஜினிகாந்த்…ஐஸ்வர்யா இப்படி செய்யலாமா.?