தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் எது கோவை குண்டு வெடிப்பு சம்பவம், 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவையில் பல்வேறு பகுதியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் கோவை மாநகரமே கதி கலங்கி போனது, பல்வேறு இடங்களில் நடந்து 19 குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் 2க்கு மேற்பட்ட இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் பல அமைப்புகள் தடை செய்யப்பட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பலரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இயக்குனர் அமீர் இறைவன் மிகப் பெரியவன் என்கின்ற புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் இவ்வேளையில், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட சில அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர், அந்த வகையில், அமீர் இயக்க இருக்கும் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் கதை கோவை குண்டு வெடிப்பில் சிறைவாசம் இருக்கும் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை மைய கதையாக வைத்து எடுக்கப்பட இருப்பதாகவும்.
பொதுவாக ஆயுள் தண்டனை கைதிகள் 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து பின்பு விடுதலை செய்யப்படுவார்கள், அந்த வகையில் சுமார் 20 வருடங்கள் சிறையில் சிறைவாசம் இருக்கும் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பொதுமனிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற ஒரு கதையை மையப்படுத்தி இறைவன் மிகப்பெரியவன் என்ற படம் கதை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.