நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அவர் தந்தை T ராஜேந்திரன் அவர்களால் அறிமுகம் செய்து. குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்த பல படங்கள் மிக பெரிய ஹிட் கொடுத்தது. மேலும் தமிழக தாய்மார்கள் குழந்தை நட்சத்திரமாக சிம்பு நடித்த எங்கள் வீட்டு வேலன் போன்ற படங்களை பார்த்து தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக பார்த்தனர். குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே சிம்புக்கு ரசிகர்கள் அதிகம்.
சிம்பு ஹீரோவாக படம் நடிக்க தொடங்கிய போது, அவருக்கான வரவேற்பும் மக்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பும் மிக பெரிய அளவில் இருந்தது. ஆனால் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் காதல் அழிவதில்லை படுதோல்வி அடைந்தது. அதன் பின்பு அவர் நடித்த அடுத்தடுத்து படங்கள் தோல்வியை தழுவியது. இதற்கு காரணம் சிம்புவின் ஓவர் பில்டப் தான் என அப்போது விமர்சனம் எழுந்தது.
பொதுவாக சூப்பர் ஸ்டார், உலக நாயகன், புரட்சி தலைவர், நடிகர் திலகம் என்கிற பெயர் மக்களால் அல்லது சக சினிமா துறையினரானால் கொடுக்கப்பட கூடிய பட்டம் ஆனால் நடிகர் சிம்பு, தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என நினைத்து கொண்டு, தனக்கு தானே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியை போட்டு கொண்டு ஸ்டைல் என்கிற பெயரில் சிம்பு ஹீரோவாக ஆரம்பத்தில் காட்டிய விரல் வித்தை எதுவும் எடுபடவில்லை.
சிம்பு ஹீரோவாக நடித்த படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றி, மற்ற பல படங்கள் அனைத்தும் படு தோல்வி, இதில் சிம்புவை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் அட்ரஸ் இல்லாமல் போனது தான் மிச்சம். சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு மிக பெரிய வெற்றியை கொடுத்தது, இதற்கு முன்பு அவர் கடைசியாக கொடுத்த வெற்றி படம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வெளியான போடா போடி தான். இதற்கு இடையில் வெளியான அணைத்து படங்களும் மண்ணை கவ்வியது.
சிம்பு படங்கள் தோல்விக்கு காரணம், படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை, இதனால் இவரை வைத்து படத்தை முடித்தால் போதும் என்றும், மேலும் எடுத்தது வரை போதும் திரையிடுவோம் என்றெல்லாம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன்பு படத்தை வெளியிட்டது. இப்படி சிம்பு மீது ஏகப்பட்ட குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் சிம்பு குறித்து இது வரை வெளிவராத ஒரு முக்கிய தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. அதில்,
சிம்பு நெருங்கிய நண்பர் VTV கணேசன் தயாரிப்பில் இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்பு நடித்த போது, படத்தின் ஒரு முக்கிய கட்சிக்காக சென்னையில் படப்பிடிப்பு வேலை நடைபெற்றது, அப்போது சிம்பு இந்த காட்சியை கோவாவில் படப்பிடிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கட்டாய படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்புக்கான வேலை கோவாவில் நடைபெற்று, பட குழு கோவா சென்றுள்ளது.
காலை படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் தயாராக இருக்க சிம்பு படப்பிடிப்பு தளத்துக்கு நீண்ட நேரமாகியும் வரவில்லை, அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று அழைத்த போது, எனக்கு மூடு இல்லை, நாளை படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து ஹீரோ வரவில்லை, பேக் ஆப் என தெரிவித்து அடுத்த நாள் படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
அடுத்தநாள் இதே போன்று மூடு இல்லை என்று படப்பிடிப்புக்கு வரவில்லை. இதே போன்று மூன்றாவது நாள் படப்பிடிப்பில் அனைவரும் தயாராக இருக்க, சிம்பு மூடு இல்லை என தெரிவிக்க, சிம்புவின் அட்டூழியம் தாங்க முடியமால் அந்த படத்தின் கேமரா மேனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என கூறப்படுகிறது.இப்படி மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு குறித்த அட்ராசிட்டியை சொல்லிக்கொண்டே போகலாம் என்கின்றனர் சினிமா துறையினர்.