தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் சமீபத்திய நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. சிவகுமார் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்த சிவக்குமார் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
குடும்பத்தில் அனைவரும் சினிமாவில் இருக்கிறார்கள் என்றாலும், வீடு குடும்பம் என்று வரும்போது அதற்கான கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருக்க வேண்டும் என்று கருதுபவர் சிவகுமார். குடும்பத்தில் மட்டுமில்லாமல் பொது இடத்திலும் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று எண்ணுகிற சிவகுமார், பல்வேறு பொது இடங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களிடம் கராராக நடந்து கொண்டு வருகிறார்.
இது அவரைப் பொறுத்தவரை சரியாக தெரிந்தாலும் மற்றவர்களுக்கு அராஜகம் ஆகவே தெரிகிறது. இதனாலேயே சிவக்குமார் பெரிதளவில் விமர்சிக்கட்டும் வருகிறார். இப்படியான சூழலில், சமீபத்தில் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த நடிகர் சிவகுமாரை அங்கிருந்தவர்கள் பலரும் வரவேற்றனர். அங்கு முதியவர் ஒருவர் சிவகுமாரை வரவேற்பதற்காக கையில் சால்வையோடு சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருந்தார்.
அதை கவனித்த சிவகுமார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று ஆவேசமாக முதியவர் கையில் வைத்திருந்த சால்வையை புடிங்கி தூக்கி எறிந்தார். சிவகுமாரின் இந்த செயல் முதியவருக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த வீடியோ இணையம் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. சிவகுமாரின் செயலை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவ்வப்போது போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சிவக்குமார் இது போன்ற பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. ஏற்கனவே செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் மொபைலை ஆத்திரத்தில் சிவக்குமார் தட்டி விட்ட சம்பவம் உண்டு. சிவகுமாரின் நடத்திக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் கிளம்பிய நிலையில் அந்த நபருக்கு புதிய போனை வாங்கி கொடுத்தார்.
சிவகுமாருக்கு வயது ஆக ஆக கோபம் அதிகம் ஆகிறது, எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே சமயம் மேடைகளில் மகாபாரதம், கம்ப ராமாயணம் போன்ற புராண கதைகளை வாய் கிழிய மணிக்கணக்கில் பேசி, ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என பலருக்கும் அட்வைஸ் செய்து வரும் சிவகுமார், பொது இடத்தில், அவர் முதலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒரு வயதானவர் சால்வை அணிவித்து மரியாதை செய்ய வந்தால் புடுங்கி தூக்கி எரிவது தான் பண்பாடா என பலரும் சிவகுமார் இந்த செயலுக்கு கடும் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சிவகுமார் நன்கு யோக களைகளை கற்று தேர்ந்தவர், அவர் செய்யும் யோகாசனங்கள் புகைப்படமாக அவ்வப்போது வெளியாகும், பொதுவாகவே, யோகாவில் ஈடு பாடு கொண்டவர்களுக்கு கோபம் இருக்காது, ஆனால், சிவகுமார் அப்படி என்ன யோக கலையை கற்று கொண்டாரோ தெரியவில்லை, பொது இடங்களில் பொசுக்கு பொசுக்குன்னு கோபப்பட்டு அவருடைய மரியாதையை அவரே கெடுத்து கொண்டு வருகிறார் என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், சூர்யா, கார்த்திக் இருவரும் அவருடைய தந்தை சிவகுமாரை பொது இடங்களுக்கு அனுமதிக்காமல் வீட்டிலே பாதுகாப்பாக வைத்து கொண்டால், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என பலரும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடதக்கது.