விஷாலை நம்பி மோசம் போன சிவகுமார் குடும்பம்.! ஒட்டு மொத்த குடும்ப கௌரவமும் போச்சு.. ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

தென்னிந்திய நடிகர் சங்கத்தை மிக பெரிய வளர்ச்சிக்கு எடுத்து சென்றதில் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் விஜயகாந்தை நடிகர் சங்கத்துக்குள் இழுத்து வந்து அவரை தலைவராக அமர்த்தியதில் முக்கிய நபராக இருந்தவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்த போது, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, நெப்போலியன் போன்றவர்கள் நடிகர் சங்கத்தில் முக்கிய பதவியில் இருந்து வந்தனர்.

கடனில் தத்தளித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்து, லாபத்தில் செயல்பட வைத்தார் அப்போதைய நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த், அதற்கு துணையாக நின்றவர்களில் முக்கியமானவர்களில், சரத்குமார், ராதாரவி நெப்போலியன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்கிய பின்பு நடிகர் சங்கத்தில் இருந்து விலகி முழு நேர அரசியவாதியானார் நடிகர் விஜயகாந்த்.

இதன் பின்பு நடிகர் சங்க தலைவரான நடிகர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி உடன் இணைந்து, எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் விஜயகாந்த் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் நடிகர் விஷால் தேவையின்றி நடிகர் சங்கத்துக்குள் குழப்பத்தை உருவாக்க, ராதாரவி மற்றும் விஷால் இடையில் மோதல் உருவானது இதை உன்னிப்பாக கவனித்து வந்த சிவகுமார் குடும்பம் நடிகர் விஷாலுக்கு ஆதரவை வழங்கியது.

சிவகுமார் குடும்பம் ஆதரவு கிடைத்த பின்பு விஷால் ஆட்டம் எல்லை மீறியது. அடுத்து நடந்த நடிகர் சங்க தேர்தலில், விஷால் உடன் சிவகுமார் மகன் கார்த்திக் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு நடிகர் சரத்குமார் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த அணி வெற்றி பெற்ற குறுகிய காலத்தில், இவர்கள் வெற்றிக்கு துணையாக இருந்த பலர் நடிகர் விஷாலின் நடவடிக்கை பிடிக்காமல் விலகி சென்றனர்.

இந்நிலையில் தற்போது மிக மோசமான நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் அழிந்து விட்டது என்றே சொல்லும் அளவுக்கு பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், இந்த அழிவுக்கும் காரணம் நடிகர் விஷால் மற்றும் அவருக்கு துணையாக இருந்த நடிகர் சிவகுமார் குடும்பம் தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தனது குடும்ப கெளரவம் நடிகர் விசலால் காற்றில் பறக்கிறது என வேதனையில் உள்ள நடிகர் சிவகுமார்.

தனது மகன் காத்திக் இனி நடிகர் சங்க விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சிவகுமார் அறிவுரையை ஏற்று கார்த்திக் ஒதுங்கி கொண்டதாக கூறப்படும் நிலையில், நடிகர் சங்கம் பற்றி ஏதும் கேட்டால் கூட அதை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என நழுவி விடுகிறார் கார்த்திக் என சினிமா வட்டாரத்தில் கூறப்படும் நிலையில். விஷாலை நம்பி நன்றாக இருந்த நடிகர் சங்கத்தை நாசம் செய்ய எதோ ஒரு வகையில் சிவகுமார் குடும்பம் விஷாலுக்கு துணை சென்றுள்ளது சினிமா வட்டாரத்தில் அவர்களுக்கு மிக பெரிய தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

திமுகவுக்கு வெட்கமாக இல்லையா.? முக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. எதற்கு தெரியுமா.?