உதவுவது போல் முன் வந்த சிவகுமார் குடும்பம்… போதும் உங்களால் நான் பட்ட காயம்… அமீர் வேதனை..

0
Follow on Google News

அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் தமிழின் கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. அதேநேரம் பருத்திவீரன் படத்தால் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்த சர்ச்சை கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பருத்திவீரன் திரைப்படம் வெளியான அந்த சமயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. மேலும் நடிகர் கார்த்தியின் அறிமுக படமான பருத்திவீரன் அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் பருத்திவீரன் திரைப்படம் வசூல் விமர்சனம் என அனைத்திலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி படமாக ஆனது.

கடந்த மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் குறித்து தகாத வார்த்தைகளையும் அவதூறான விஷயங்களையும் கூறி இருந்தார். ஞானவேல் ராஜாவின் இந்த பேட்டியில் இணையத்தில் வைரலானது. மேலும் திரை பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் இந்த வீடியோ கண்டனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலர் ஞானவேல் ராஜாவின் இந்த பேட்டிக்கு எதிராக குரல் கொடுத்து அமீருக்கு ஆதரவாக நின்றார்கள்.

அந்த வகையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கோங்குரா, சினேகன், பொன்வண்ணன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக நின்று ஞானவேல் ராஜாவுக்கு எதிராக அவர்களது கருத்துக்களை பதிவிட்டனர். தொடர்ந்து வந்த எதிர்ப்பினால் அந்த பேட்டியில் அமீர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சிலர் அவர்களது அறிக்கையை வெளியிட்டனர்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் அமீர், ஞானவேல்ராஜா சொன்னதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றார். அதனை தொடர்ந்து ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறியிருந்தார்

இந்நிலையில், பருத்திவீரன் ரிலீஸின் போது தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் சிவசக்தி பாண்டியன், இந்த சர்ச்சை குறித்து சமீபத்தில் பேட்டிக் கொடுத்திருந்தார். அதில், சிவகுமார் தான் பருத்திவீரன் படத்தை அமீரிடம் இருந்து வாங்க வேண்டாம் என சொன்னதாகக் கூறியிருந்தார். மேலும் பேசிய அவர் அமீர் மிகச்சிறந்த படைப்பாளி எனவும் அவர் நினைத்திருந்தால் ஞானவேல் ராஜா கொடுத்த பணத்தை தான் உபயோகித்து கொண்டு படத்தை அப்படியே நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதாலும் கார்த்தி போன்ற புதுமுக நடிகர் தன்னால் வளர வேண்டும் என்பதால் அப்படத்தை கடன் வாங்கியாவது தொடர்ந்து இயக்கி முடித்தார் என தெரிவித்திருந்தார்.

மேலும் இன்று அவர் சூர்யா கார்த்தியை வைத்து அடுத்த படம் இயக்கினாலும் அப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும் பல திரைப்படங்களை தயாரித்த ஞானவேல்ராஜா தற்போது இப்படி அமீரைபற்றி புகார் கொடுப்பது நன்றாக இல்லை எனவும், மேலும் அமர்ந்து பேசி முடிக்க வேண்டிய இப்பிரச்சினையை வீணாக பெரிய பிரச்சினையாக மாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அமீர் தரமான தயாரிப்புப் பணியில் ஈடுபடும் தயாரிப்பாளர். அவர் தான் கார்த்தியையும் ஸ்டூடியோ கிரீனையும் வெளியில் கொண்டு வந்தார். எனவே, அமீருக்கு கார்த்தியும் அவரது குடும்பத்தினரும் நன்றியுடன் செயலாற்றியிருக்கவேண்டும். அமீர் நாளையே சூர்யாவையோ, கார்த்தியையோ வைத்துப் படம் எடுத்தால் நிச்சயம் சில்வர் ஜூப்ளி தான் என்று பேசியுள்ளார். பருத்திவீரன் படம் அமீரின் கையிலிருந்து ஞானவேல் ராஜாவுக்கு போனபோது தயாரிப்பாளர் சங்கத்தில் சிவசக்தி பாண்டியன் முக்கிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.