நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிரின்ஸ், இந்த படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், சுமார் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படம் தற்பொழுது வரை சுமார் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் தினமும் சுமார் ஒன்றரை கோடி முதல் 2 கோடி வரை ஒரு மாதங்களைக் கடந்தும் வசூல் செய்து வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியாவதற்கு முன்பு, அவருடைய நடிப்பில் டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களை ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன். உடனே தன்னை ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக மூன்றாவது நடிகர் என்கிற நினைப்பின், தலைகணமும் மேலும் தன்னை பில்டப் செய்வதில் அக்கறை காட்டிய சிவகார்த்திகேயன், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அதனால் தான் பிரின்ஸ் படுதோல்வி என கூறப்படுகிறது.
இதில் பிரின்ஸ் படத்தின் தமிழகத் திரையரங்கு உரிமையைப் பெற்ற அன்புச்செழியன், அந்த படம் வெளியாவதற்கு முன்பு எம்ஜிஆர், ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் என்று ஓவர் பில்டப் கொடுக்க, தற்பொழுது பிரின்ஸ் பட படுதோல்வியால், எதோ ஒரு படம் வெற்றி பெற்ற உடனே இவரெல்லாம் எம்ஜிஆர், ரஜினியுடன் ஒப்பிடலாமா என்று சினிமா ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் வெளிநாடு உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர் தற்பொழுது மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராய் வைத்து சொப்பன சுந்தரி என்கின்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் பிரின்ஸ் படத்தில் வரும் லாபத்தை வைத்து சொப்பன சுந்தரி பாக்கி படப்பிடிப்பை நடத்தி வெளியிட்டு விடலாம் என்கின்ற ஒரு திட்டத்துடன் பிரின்ஸ் படத்தின் வெளிநாடு உரிமையை வாங்கி வெளியிட்டார்.
ஆனால் பிரின்ஸ் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் தற்பொழுது சொப்பன சுந்தரி படமும் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் சிவகார்த்திகேயன் தன்னுடைய வாய் கொழுப்பை குறைத்துக் கொண்டு, தன்னை பில்டப் செய்வதை விட்டுவிட்டு, படத்தின் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் தான் படம் வெற்றி பெறும் என்றும், இரண்டு படங்கள் வெற்றி பெற்றவுடனே தன்னை எம்ஜிஆர், ரஜினி ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதை தற்போது அதாளபளத்தில் விழுந்த சிவகார்த்திகேயன் உணர்ந்திருப்பார் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.