தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன், மெரினா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக ஆதாரம் எடுத்தார். மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய உச்சத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி நடிகர் என்கிற பாராட்டையும் பெற்றிருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி நடிகர் ரஜினி, விஜய் ஆகியோரை பின்பற்றி இருந்திருந்தால், இன்று எந்த ஒரு கடன் தொல்லை இல்லாமல் இருந்திருப்பார். ஆனால், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் சிவகார்த்திகேயன், அவருடைய நண்பர் ஆர்.டி ராஜா உடன் இணைந்து சொந்தமாக SK புரொடக்ஷன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரிக்க ஆரம்பித்தார்.
சொந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷன்காக அதிக பணம் செலவு செய்து, சிவகார்த்திகேயனை ஓவர் பில்டப் கொடுத்து விளம்பரம் செய்யப்பட்டார். சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் நடிக்கும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து தன்னை ஒரு எம் ஜி ஆர் போன்ற கொடை வள்ளல் போன்று காட்டி கொண்டார்.
இதுபோன்று பப்ளிசிட்டிக்காக பல கோடியை வாரி இறைத்தனர். இதனால் ஒவ்வொரு படத்தின் கிடைக்கும் வரவை விட செலவு அதிகமானது. இருந்தும் விளம்பரம் மோகத்தில் தொடர்ந்து அதே பார்முலாவை பின்பற்றி வந்தனர்.இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தோல்வியால் ஏற்பட்ட கடன் கடன் சுமார் 100 கோடி வரை நெருங்கியது.
இந்நிலையில் ஆர்டி ராஜா மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஆனால் மொத்த கடன் சுமையையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். இதன் பின்பு தனியாக டான் மற்றும் டாக்டர் படங்களை தயாரித்து நடித்தார். இந்த இரண்டு படமும் நல்ல லாபத்தை சிவகார்த்திகேயனுக்கு பெற்று தந்தது.
இருந்தும் இதுவரை வாங்கிய கடனில் 25 கோடி வரை மட்டுமே செலுத்தியுள்ளதாகவும். பாக்கி மேலும் 75 கோடி கடனை சிவகார்த்திகேயன் செலுத்த வேண்டியுள்ளதால் தற்பொழுது கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து, குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த கால அவகாசத்துக்குள் சிவகார்த்திகேயன் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.