அய்யா.. நீங்க தான் காப்பாத்தணும்… கடன் தொல்லையால் சிவகார்த்திகேயன் செய்த தந்திரம்…

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும்மாவீரன் படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு சொந்தமாக தயாரித்து படங்களை வெளியிட்டு வந்தார், ஆனால் மாவீரன் படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டாலும், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.

அந்த கூட்டமைப்பில் இதற்கு முன்பு சிவகார்திகேயன் வாங்கிய கடனை தவணை முறையில் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அடைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது, ஆனால் ஒவ்வொரு படம் வெளியாகும் போது தவணை முறையில் கடனை அடைக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த சிவகார்த்திகேயனை, இம்முறை இறுக்கி பிடிக்க முடிவு செய்தது கூட்டமைப்பு.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் மாவீரன் படத்தில் வரும் வசூலில் சுமார் 33 கோடி ரூபாய் கடன் காரர்களுக்கு செட்டில் செய்யவேண்டும், மீத பணத்தை அடுத்தடுத்த படங்களில் செட்டில் செய்ய வேண்டும் என கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் மாவீரன் படம் வெளியான பின்பு வசூல் ஆகும் பணத்தில் 25 கோடி ரூபாயும், ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு 8 கோடி ரூபாயும் தரவேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

என்னடா இது மாவீரன் படத்தில் தனக்கு கிடைக்கும் மொத்த பணத்தையும் கடன் காரர்களுக்கு கொடுத்து விட்டால், நாம் என்ன செய்வது என பெரும் குழப்பத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு அதிர்ஷ்ட லட்சுமி தேடி வந்து கதவை தட்டுவது போல் அமைந்தது சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடுவதாக இருந்த லைக்கா நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை.

லைக்கா நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்குப் பின்பு லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களும் சிறு சிறு பிரச்சனைகளில் தவித்து வருகிறது, அதேபோன்று அவர்கள் வெளியிடுவதாக இருந்த படங்களும் சிக்கலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட சிவகார்த்திகேயன் நேரடியாக உதயநிதி ஸ்டாலினை சந்தித்தாக கூறப்படுகிறது.

அப்போது, லைக்கா நிறுவனம் பிரச்சனைகளை சிக்கியதும், அதே நேரத்தில் தன்னுடைய படம் வெளியானால் கடன் காரர்கள் கொடுக்கும் நெருக்கடியும் தெரிவித்த சிவகார்த்திகேயன், இப்படி ஒரு சூழலில் நீங்கதான் என்னை காப்பாற்ற வேண்டும், என அயலான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு படத்தையும் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுவதற்கு கொடுத்து விட்டார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அயலான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு படங்களும் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் வெளியிடுவதாக முடிவான பின்பு, சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்த கடன்காரர்கள் சிவகார்த்திகேயன் வெளியாகும் படங்களுக்கு இனி எந்த ஒரு இடையூறும் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டவர்கள், எப்ப தான் நம்மளுடைய கடனை சிவகார்த்திகேயன் அடைப்பார் என புலம்பித் தவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் யாரிடம் சென்றால், இவர்கள் தமக்கு கடன்காரர்கள் நெருக்கடி கொடுக்க மாட்டார்கள் என்று நன்கு அறிந்தே சிவகார்த்திகேயன், கடங்காரர்களுக்கு கல்தா கொடுப்பதற்காகவே ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸிடம் தன்னுடைய படத்தை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இன்னும் சிவகார்த்திகேயன் எத்தனை காலத்துக்கு தான் இப்படி டிமிக்கி அடித்து காலத்தை ஓட்டுவார் என்றும்.

ஒவ்வொரு படத்தின் போது கடன்காரர்களால் பிரச்சனையை சந்திக்கும் சிவகார்த்திகேயன். இப்படி ஒவ்வொரு முறையும் டிமிக்கி கொடுத்து தப்பிப்பதை தவிர்த்து சிறிது சிறிதாக வாங்கிய கடன் தொகையை அடைத்து இருந்தால். இந்நேரம் அவருடைய மொத்த கடனையும் அடைத்து இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் கடன்காரர்களிடம் இருந்து எப்படி டிமிக்கி அடிப்பது என்று தான் சிவகார்த்திகேயன் சிந்திக்கிறாரே தவிர, அந்த கடனை எப்படி அடைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் சிவகார்த்திகேயனுக்கு இருந்திருந்தால் இதுபோன்று செய்ய மாட்டார் என்கின்றனர் சினிமா துறையினர்.