நன்றி மறந்து ஆணவ திமிரில் நடந்த சிவகார்த்திகேயன்… மனம் நொந்து பொன்ராம் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நுழைந்து, அதன் பின்பு தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் மிகப்பெரிய ஹிட் கொடுத்து, பட்டி தொட்டி எங்கும் சிவகார்த்திகேயன் கொண்டு சேர்த்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் இயக்குனர் பொன்ராம்க்கு முதல் படம் ஆகும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் கமர்சியல் கலந்த ஒரு காமெடி படம். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஏற்றது போன்று இந்த படத்தின் கதையை பொன்ராம் அமைந்து இருப்பார்.

பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பின்பு அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது, மேலும் அவருடைய சம்பளமும் உயர்ந்தது. ஆனால் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாம் படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் இயக்குனர் பொன்ராஜ் இயக்கத்தில் ரஜினி முருகன் படத்தில் கூட்டணி சேர்ந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்து மிக பெரிய சரிவில் இருந்த சிவகார்த்திகேயனை மீண்டும் உயரத்திற்கு கொண்டு சேர்த்தது பொன்ராம் இயக்கத்தில் வெளியான ரஜினி முருகன் படம். இதனை தொடர்ந்து மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் கூட்டணி சேர்ந்த சிவகார்த்திகேயன். சீமாராஜா என்ற படத்தில் நடித்தார். சீமராஜா படத்தில் கதையை முதலில் பொன்ராஜ் கூறும் போது, இந்த படத்தின் கதாநாயகன் ஒரு கோழையாக வருகிறார்.

ஒரு கட்டத்தில் படத்தின் பிளாஷ் பேக் போது, தன்னுடைய பாரம்பரியம் ஒரு வீரமிக்க பாரம்பரியம் என்பது கதாநாயகனுக்கு தெரிய வருகிறது. பின்பு அந்த கதாநாயகன் வீரனாக மாறுவது போன்று கதையை சிவகார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார் பொன்ராம். ஆனால் இந்த கதையை கேட்ட சிவகார்த்திகேயன், சார் நீங்க இன்னும் என்னை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பார்த்தது போன்று பார்க்கிறீர்கள்.

நான் இப்ப எவ்வளவு பெரிய ஹீரோ தெரியுமா.? அதனால் இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய் போன்று எனக்கும் ஓபனிங் சாங் வேண்டும், ஒரு மாஸான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக எனக்கு ஜோடியாக சமந்தா நடிக்க வேண்டும் என கண்டிஷன் போட்டு கதையில் பல குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்காக கதையில் மாற்றம் செய்து பொன்ராம் எடுத்த சீமா ராஜா படம் படுதோல்வி அடைந்தது. கதையில் சிவகார்த்திகேயன் குழப்பம் செய்யவில்லை என்றால் உறுதியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்று சீமராஜாவும் மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கும். ஆனால் சிவகார்த்திகேயன் மூக்கை நுழைத்து பொன்ராம் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் சீம ராஜா படத்தில் ஹீரோ ஒரு கோழையாக பின்பு அவருடைய பாரம்பரியம் அறிந்து வீரனாக மாறுவது போன்று படம் கதை இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கதைதான் பொன்ராம் முதல் முதலில் சிவகார்த்திகேயனிடம் சொன்ன கதை. சிவகார்த்திகேயன் கதையில் குழப்பம் செய்ததால் தான் சீமாராஜா படுதோல்வி அடைந்தது

இந்நிலையில் சமீபத்தில் முக்கியமான சில காரணங்களுக்காக சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் பொன்ராம் ஆனால் சிவகார்த்திகேயன் தொலைபேசியை எடுக்கவே இல்லை. மேலும் சிவகார்த்திகேயனுக்கு செய்தியும் அனுப்பியுள்ளார் பொன்ராம். ஆனால் சிவகார்த்திகேயன் எந்த ஒரு ரிப்ளையும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சினிமாவில் சிவகார்த்திகேயன் மிக பெரிய சரிவில் இருந்தபோது தூக்கி விட்ட பொன்ராம், செய்த நன்றியை மறந்து ஆணவதிமிரில் அவருடைய தொலைபேசி அழைப்பை புறக்கணிப்பதை, நினைத்து மனம் நொந்து போய் உள்ளார் பொன்ராம் என்பது குறிப்பிடத்தக்கது.