தனுஷை அடித்து துவம்சம் செய்த சிவகார்த்திகேயன்… வசூலில் சாதித்து காட்டிய அயலான்…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது. பீரியட் படமாக உருவான இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. துப்பாக்கிக் காட்சிகள் சலிப்பூட்டும் வகையில் இருந்ததாலும் திரைக்கதையிலும் பெரிய அளவில் புதுமை இல்லாததால் பொங்கலுக்கு பிறகு கூட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது.

2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் ஆர்.ரவிக்குமார். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’ நீண்ட காத்திருப்புக்கு பின்னர் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதுவும் கடைசி நேர சிக்கல்களை கடந்துதான் திரைக்கே வந்தது.

ஏலியனை மையமாக கொண்ட இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுவும் படம் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு என்று குழந்தை ரசிகர் பட்டாளம் உண்டு.

அதனால், இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று தியேட்டரில் கூட்டத்தை கூட்டி வந்தது. ஆனால், படத்தில் முதல் பாதி இருந்த அளவிற்கு இரண்டாம் பாதி இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. முதல் பாதியின் சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதி பாதித்ததால் மெகா ஹிட் ஆக உருவெடுக்கவில்லை. ஆனால், முதல் நாளில் கேப்டன் மில்லர் உடன் பின் தங்கிய நிலையில் இருந்த அயலான் பின்னர் ஜெட் வேகத்தில் முன்னேறியது.

கேப்டன் மில்லர் படம் இந்தியாவில் முதல் நாளில் மட்டும் மொத்தம் 1,428 காட்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் படிப்படியாக ரசிகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் முதல் வார கலெக்‌ஷன் மட்டும் ரூபாய் 40.36 கோடி. இந்த விபரத்தினை சாக்நிக் வலைதளம் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் மொத்தம் ரூபாய் 60.7 கோடி வசூல் செய்துள்ளது.

அயலான் படத்தைப் பொறுத்தவரை முதல் நாளில் நாடு முழுவதும் தமிழில் மட்டும் ஆயிரத்து 54 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரசிகர்களின் வருகையை மையப்படுத்தி காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் முன்னதாக நான்கு நாள்களில் ரூ.50 கோடி வசூலை உலகம் முழுவதும் குவித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், சாக்நிக் வலைதளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 34.65 கோடி வசூல் செய்துள்ளது என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்கள், அயலானுக்கு பாசிட்டிவாக அமைந்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கேப்டன் மில்லரை பின்னுக்குத் தள்ளி அயலான் முதலிடத்திற்கு வந்துள்ளது. கேப்டன் மில்லர் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் அயலான் படமோ 4 கோடி தான் கலெக்‌ஷன் செய்தது.

ஆனால், 9வது நாள் நிலவரப்படி பார்த்தால், அயலான் நேற்று 2.5 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது. அதேநேரம் தனுஷின் கேப்டன் மில்லர் 1 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளது. இதனால் இந்தாண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் தான் ரியல் வின்னர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இரண்டு படங்களுக்குமே வசூலில் டல் அடித்ததாக கூறப்படுகிறது.