அஜித்தை வம்பிழுக்கும் சிவகார்த்திகேயன்… இதெல்லாம் சிவகார்த்திகேயனுக்கு தேவையா.!

0
Follow on Google News

அமரன் வெற்றிக்கு பின்பு சிவகார்த்திகேயனின் அட்ராசிட்டி எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இது அவருக்கே நல்லதில்லை என சினிமா வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள், ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் சினிமாவில் என்றி கொடுத்து மிக குறுகிய காலத்தில் மிக பெரிய உயரத்தை அடைந்தார்.

பொதுவாக சிவகார்த்திகேயன் தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொகுப்பாளராக தன்னுடைய நகைச்சுவையால் மக்களை கவர்ந்த நிலையில் அவர் மெரினா என்கின்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார் அடுத்ததாக கேடி பில்லா கேளடி ரங்கா என்ற படத்தில் விமலுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக நடித்தார், சிவகார்த்திகேயன் நடித்த இந்த படங்கள் காமெடி ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து காமெடி கலந்த கதையில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது, காரணம் ஆக்சன் ஹீரோவாக அவர் காக்கிச்சட்டை சீமா ராஜா போன்ற படங்களில் முயற்சி செய்தாலும் அது அனைத்துமே தோல்வி அடைந்தது. அந்த வகையில் சிவகார்த்திகேயனை மக்கள் காமெடியனாகத்தான் பார்த்தார்கள் தவிர அவரை ஆக்சன் ஹீரோவாக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்படி மெல்ல வளர்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு நேரமும் கை கொடுத்தது அந்த வகையில் நடிகர் விஜய் அரசியல் என்றி கொடுக்க இருக்கும் நிலையில் சினிமாவிலிருந்து விலகுவதாக முடிவு செய்தார் விஜய். தற்பொழுது விஜய் நடித்து வரும் படம் தான் கடைசி படம், இந்த நிலையில் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட சிவகார்த்திகேயன்.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் விஜய் நடித்த கோட் படத்தில் தனக்கு ஒரு சிறிய காட்சி நடிக்க கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி விஜயுடன் ஒரு காட்சியில் வந்து செல்கிறார் சிவகார்த்திகேயன், இதற்கு முக்கிய காரணம் விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் விஜய் ரசிகர்கள் தன்னுடைய படத்தை திரையில் கொண்டாடுவார்கள் என்கின்ற ஒரு பேராசை தான்.

ஆனால் விஜய் ரசிகர்கள் அந்த அளவிற்கு விஜயை வைத்து பார்த்த இடத்தில் சிவகார்த்திகேயனை வைத்து பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றது சினிமா வட்டாரம். சிவகார்த்திகேயன் விஜயுடன் மட்டுமல்ல ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரஜினி ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்று முயற்சி செய்தார், அவருடைய முயற்சிக்கு உதவி செய்யும் வகையில் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் ரஜினியிடம் பேசினார்.

ஆனால் ரஜினி இறுதி வரை என்னுடைய படத்தில் இன்னொரு ஹீரோவை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார் . ரஜினியால் புறக்கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் பின்பு விஜய்யுடன் கோட் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பை பெற்றுவிட்டார். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு செல்வதால் விஜய் அஜித் என்கின்ற ஒரு போட்டியை அஜித் – சிவகார்த்திகேயன் என்று மாற்ற திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

அப்படி ஒரு சூழலை உருவாகிவிட்டால் தன்னுடைய படத்துக்கு விஜய் ரசிகர்கள் தனக்கு ஆதரவாகவும் அஜித் ரசிகர்கள் தன்னை எதிர்பார்ப்பார்கள். இது தன்னுடைய வியாபாரத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். அந்த வகையில் அஜித் நடிக்பில் வெளியாக இருக்கும் படத்துடன் தன்னுடைய படத்தை மோத விட்டுவிடலாம் என்று சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அடுத்து அஜித் நடித்து வரும் படத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, எதிர்காலத்தில் அஜித் நடிக்கும் படத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை மோதவிட்டு இந்த சினிமா துறையில் அஜித் – சிவகார்த்திகேயன் என்ற நிலை உருவாக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்தவர்கள் அஜித் உயரம் என்ன சிவகார்த்திகேயனுக்கு தெரியாதா.? இது சிவகார்த்திகேயனுக்கு தேவையில்லாத வேலை என்று பலரும் கருத்து தெரிவித்தது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here