நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் படத்தின் டைட்டில் பஞ்சாயத்து ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில், அந்த படத்தின் கதை என்ன என்பது தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படம் 1965 காலகட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் இந்தி இனிப்புக்கு எதிராக போராடிய போராட்டத்தின் மையமாக கொண்டுள்ளது
இதில் மூ இராசேந்திரன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், நெடுமாறன் என்கின்ற கதாபாத்திரத்தில் அதர்வாவும் மற்றும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவியும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/Actor-sivakarthikeyan-1024x576.jpg)
அதாவது 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 3000 பெயர் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த போராட்டத்தை தலைமை தாங்கி இரண்டு மாணவர்கள் வழிநடத்துகிறார்கள். அதில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரமாக நடிக்க இருக்கும் மு ராசேந்திரன் மற்றும் அதர்வா கதாபாத்திரமாக ஏற்று இருக்கும் நெடுமாறன் ஆகிய இருவரும் இந்த போராட்டத்தை தலைமையேற்று நடக்கிறார்கள்.
அந்த போராட்டத்தில் நாங்கள் இந்தி எதிர்ப்புக்கு எதிரானவர்கள் அல்ல இந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள், தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்கின்ற விண்ணை பிளக்கும் கரகோஷத்துடன் மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் சிதம்பரத்தை நோக்கி செல்கிறார்கள் அப்போது அவர்களை தடுத்து நிறுத்தும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இன்று ஜனவரி 26 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் இந்த பேரணியை ரத்து செய்துவிட்டு நாளை பேரணி நடத்துங்கள் என்று தெரிவிக்கிறார்கள், இதை ஏற்றுக்கொண்டு மு ராசேந்திரன் மற்றும் நெடுமாறன் தலைமையிலான மாணவர்கள் கலைந்து செல்கிறார்கள். அடுத்த நாள் ஜனவரி 27 சுமார் 3000 மாணவர்களை திரட்டிக்கொண்டு பேரணியை தொடங்குகிறார்கள்,
ராஜேந்திரன் மற்றும் நெடுமாறன் இருவரின் தலைமையில் நடந்த மாணவர் போராட்டத்தில் அவர்கள் மீது புகையைக்குண்டுகள் வீசப்படுகிறது, துப்பாக்கி காட்டி போலீஸ் சார் மிரட்டுகிறார்கள், இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கற்களை எடுத்து எதிர் தாக்குதல் நடத்துகிறார்கள், இதனால் அங்கே மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில், அங்கே அந்தப் போராட்டத்தை வழிநடத்திக்கொண்டிருக்கும் மு ராசேந்திரன் நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பட்டு அங்கேயே சுருண்டு விழுகிறார். வெள்ளைத் துணியை ஏந்தி போராட்டத்தை நிறுத்த மாணவர்கள் முற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மூ ராசேந்திரனை காப்பாற்ற முன்வருகிறார்கள்.
ஆனால் நெருங்கி வந்தால் உங்களைச் சுடுவோம் என்று போலீசார் மிரட்டுகிறார்கள், இப்படி ஒரு சூழலில் துடிதுடித்து இறந்த விடுகிறார் மூ ராசேந்திரன். இந்தபோராட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்திய மூ ராஜேந்திரன் கதாபாத்திரத்தை ஏற்று தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி முழுக்க முழுக்க பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் பராசக்தி படத்தை இயக்கும் சுதா கொங்கரா, இதற்கு எடுத்த சூரரை போற்று, இறுதி சுற்று போன்று இந்த படத்திலும் காதல் மற்றும் காமெடிகள் கலந்து சுவாரசியமாக எடுக்க இருக்கிறார். இயக்குனர் சுதா கொங்காரா.