ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படம் தோல்விக்கு பின்பு, பல முன்னனி நடிகரிடம் கால் சீட் கேட்டு, காத்திருந்து ஏமாந்து போன முருகதாஸுக்கு கை கொடுத்து கொடுக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் கள் சீட் கொடுத்துள்ளார்.
தற்பொழுது சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தை முடித்தவுடன் முருகதாஸ் இயக்கம் புதிய படத்தின் படிப்பு தொடங்க இருக்கிறது. அந்த வகையில் புதிய படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பிரமிக்கும் வகையில் தன்னுடைய முழு திறமையும் முருகதாஸ் காட்ட இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் தற்பொழுது இருந்து மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ .ஆர்.முருகதாஸ்.
இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எப்படி கமிட்டானார் என்கின்ற ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்தவர் அந்த சமயத்தில், தர்பார் படம் வெளியாவதற்கு முன்பு, நடிகர் அல்லு அர்ஜுன் , முருகதாஸ் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக கமிட் செய்யப்பட்டார்.
அந்தப் படத்தை தெலுங்கு சினிமா துறையைச் சார்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரசாத் என்கின்ற தயாரிப்பாளர் தயாரிப்பதற்கு முன் வந்தார், இந்த படத்திற்காக ஏ ஆர் முருகதாஸுக்கு இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. தர்பார் படம் தோல்வி, அதனைத் தொடர்ந்து விஜய் படத்தில் முருகதாஸ் கமிட்டாகி இருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து விஜய் வெளியேறிய சம்பவம்.
இப்படி தொடர்ந்து முருகதாஸுக்கு சரிவை சந்தித்து வந்த நிலையில், அல்லு அர்ஜுனும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதை கைவிட்டு விட்டார். இந்த நிலையில் முருகதாஸிடம் இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை கொடுத்திருந்த திருப்பதி பிரசாத் அதை திருப்பி கேட்காமல் முருகதாஸிடமே வைத்திருக்க சொன்னவர்கள், அடுத்து விரைவில் ஒரு படம் எங்களுக்கு பண்ணித் தாங்க என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தமிழ் போன்று தெலுங்கு சினிமாவிழும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்த அதிக கவனம் செலுத்தி வரும் சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை முடித்துவிட்டு தெலுங்கு தயாரிப்பாளரான திருப்பதி பிரசாத் இடம் கால் சீட் கொடுத்தார், ஏற்கனவே முருகதாஸிடம் இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்து இருந்த திருப்பதி பிரசாத்,
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க வைத்து ஏற்கனவே கொடுத்த அட்வான்ஸ் தொகை இரண்டு கோடி ரூபாயை கழித்து விடலாம் என்று திட்டமிட்டனர், இதன் அடிப்படையில் தான் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கூட்டணி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.