தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன். பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமானார். சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் போதே தன்னுடைய நகைச்சுவை பேச்சுகளால், அவருக்கென ஒரு தனி ரசிகர்களை ஏற்படுத்தினார் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆரம்ப கட்டத்தில் சந்தானம் போன்று நகைச்சுவை நடிகராக சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் சிவகார்திகேயன் ஆசையாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதத்தில் அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. மேலும் அவர் நடித்த படங்கள் தொடர் வெற்றியை பெற்றது. இந்நிலையில் மிகக் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார் சிவகார்த்திகேயன்.
ஒரு கட்டத்தில் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்து, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சினிமா படங்களை சொந்தமாக தயாரிக்க தொடங்கினார். ஆனால் இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து மிகப் பெரிய நஷ்டத்தை சிவகார்த்திகேயனுக்கு ஏற்படுத்தியது. இதனால் கடன் வாங்கி படம் எடுத்து வந்த சிவகார்த்திகேயன் மேலும் நஷ்டத்தை சந்தித்து, வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியமால் தத்தளித்தார்.
சுமார் 100 கோடி ரூபாய் கடனாளியான சிவகார்த்திகேயனுக்கு, கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். இதனால் கடன் வாங்கியவர்களிடம் வாங்கிய சுமார் 100 கோடி கடனை தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெளியிட்டின் போதும் தலா 25 கோடி விதம், நான்கு படத்தில் மொத்த கடனையும் அடைத்து விடுவதாக சிவகார்த்திகேயன் உறுதியளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியான போது 25 கோடி ரூபாய் கடனை முதல் தவணையாக அடைத்துள்ளார். அடுத்த அவருடைய நடிப்பில் டாக்டர் படம் வெளியானபோது இரண்டாவது தவணைக்கான கடன் தொகையை சிவகார்த்திகேயன் செலுத்தவில்லை. இந்நிலையில் தற்பொழுது கடன்காரர்கள் சிவகார்த்திகேயனுக்கு கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.
ஒரு வருடத்திற்குள் பாக்கி கடன் 75 கோடி கடனை கொடுக்க வேண்டும் என தேதி குறிப்பிட்டுள்ளார்கள் கடன் காரர்கள். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி பெயரில் சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன், அந்த யூட்யூப் சேனலை தற்பொழுது, கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் சுமார் 70 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு கடன்காரர்கள் கொடுத்த கடும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தான், யூ டியூப் சேனலை விலைக்கு விற்பனை செய்துள்ளார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய யூடியூப் சேனலை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்பனை செய்ததின் பின்னணியில் அவருக்கு உதவியாக உதயநிதி ஸ்டாலின் இருந்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.