தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படத்தில் அறிமுகமானார், இருந்தாலும், தனுஷ் உடன் 3, மற்றும் தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாக எதிர் நீச்சல் போன்ற படங்கள் சிவகார்திகேயனை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது, அந்த வகையில் சிவகார்த்திகேயன் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தனுஷ்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் – தனுஷ் இருவருக்கும் இடையிலான மனக்கசப்பு காரணமாக இருவர் உறவில் ஏற்பட்டது. இந்த நிலையில் தனுஷ் வளர்த்து விட்ட சிவகார்த்திகேயன் அவ்வப்போது தனுசுக்கே போட்டியாக சினிமா துறையில் பல நேரங்களில் செயல்பட்டு வருகிறார், சென்னையில் தனுஷ் அலுவலகம் இருக்கும் அதே பகுதியில் சிவகார்த்திகேயனும் அவருடைய அலுவலகத்தை திறந்து தனுசுக்கு எதிராக தன்னுடைய கெத்தை காட்டியவர்.
அதேபோன்று சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள புதிய bmw உயர்தர காருக்கு தனுஷ் பயன்படுத்திய 0010 என்கின்ற அதே நம்பரையும் பயன்படுத்தி தனுஸை சீண்டும் வகையில் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக தன்னுடைய நடிப்பில் அயலான் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் என பாராட்டுகளை பெற்றவர், இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதை பெற்று இந்தியா அளவின் தன்னுடைய நடிப்பை பார்த்து வியக்க வைத்தவர் தனுஷ். அப்படி இருக்கையில் தனுஷை ஒரு போட்டியாளராக சிவகார்த்திகேயன் கருதுவது, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும் என்கின்றனர் சீனிவா விமர்சகர்கள்.
இருந்தாலும் அடங்காத சிவகார்த்திகேயன் தனுஷ் என்னெல்லாம் செய்கிறாரோ அதை அப்படியே பின்பற்றி வருகிறார்.இதற்கு முன்பு தனுஷ் தெலுங்கில் என்ட்ரி கொடுத்த அவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது, அதைப் பின்பற்றி சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களையும் தெலுங்கில் ரிலீஸ் செய்து, தெலுங்கு ரசிகர்களிடம் சென்று பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார, ஆனால் தனுஷ் அளவுக்கு தெலுங்கில் சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு இல்லை.
இந்நிலையில் தனுஷ் இதற்கு முன்பு பாலிவுட்டில் சில ஹிந்தி படங்கள் நடித்து அங்கேயும் பெயர் பெற்றவர், தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் பாலிவுட்டில் தனுஷ் நடிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது சிவகார்த்திகேயனும் தனுசை பின்பற்றி ஹிந்தியில் படம் நடிப்பதற்காக மும்பையில் சில நாட்கள் தங்கி அங்குள்ள இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தனுஷை போட்டியாக கருதி இந்தி சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிக்க முயற்சி செய்து வருவது, தனுஷை தன்னுடைய நேரடியா போட்டியாளராக சிவகார்த்திகேயன் கருதினாலும் கூட, ஆனால் சிவகார்த்திகேயனை தனுஷ் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்கிறது சினிமா வட்டாரங்கள், தனுஷ் படங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைத்தது அவரின் நடிப்பு. மேலும் ஒவ்வொரு படத்திலும் தனுஷ் நடிப்பு மிக பெரிய பாராட்டை பெரும்.
ஆனால் சிவகார்த்திகேயன் படங்கள் கமர்சியலாக வெற்றி பெற்றுள்ளது தவிர, எந்த ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பு சொல்லும்படி இல்லை.என்கிற கருத்து உள்ளது, மேலும் இந்தி சினிமாவில் நடிக்க சிவகார்த்திகேயன் எடுத்துள்ள முயற்சி என்பது அவருக்கே இதெல்லாம் ஓவர், என்றும், யாரோ நீங்க தான் அடுத்த விஜய், அஜித் என சிவகார்த்திகேயனை உசுப்பேத்தி விட்டிருக்கலாம், அதான் ஹிந்தி சினிமா கனவில் சிவகார்த்திகேயன் மிதக்கிறார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.