நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தயாரித்த படங்கள் பல தோல்வி அடைந்து மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் கடன் வாங்கி படம் எடுத்து மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி அதனால் சுமார் 100 வரை கோடி கடன் ஏற்பட்டது. கடன் அடைக்கமால் சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட மாட்டோம் என கடன் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்தனர்.
இதனை தொடர்ந்து கடன் பெற்றவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில். தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ்ன் போது சுமார் 25 கோடி ரூபாய் விதம் நான்கு தவணையில் 100 கோடி ரூபாய் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் வெளியான போது முதல் தவணையாக 25 கோடி ரூபாயை கொடுத்துள்ளார்.
ஆனால் அதன் பின்பு அவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான், பிரின்ஸ் போன்ற பட ரிலீஸ்ன் போது, ஏற்கனவே கடன் வாங்கியவர்களிடம் செய்த ஒப்பந்தம் படி சிவகார்த்திகேயன் நடந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போது, அவருக்கு கடன் கொடுத்த பைனான்சியர் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் பிரச்சனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் அந்த பிரச்சனைக்கு முழுவதுமாக தீர்வு காணாமல், அந்த நேரத்தில் தன்னுடைய படம் ரிலீஸ் ஆனால் போதும் என்பதற்காக, ஒரு சிறிய தொகையை கொடுத்து இப்போதைக்கு இதை வைத்துக் கொள்ளுங்கள் என்பது, அல்லது வேறு எதாவது உத்திரவாதம் கொடுத்து பைனான்சியர்களை சரி செய்து படத்தை ரிலீஸ் செய்யும் சிவகார்த்திகேயன், படம் ரிலீஸ் ஆன பின்பு அதைச் செய்கிறோம் இதை செய்கிறோம் என சொன்ன உத்திரவாதத்தை மறந்து அடுத்த படத்தில் நடிப்பதில் பிசியாகி விடுவார் என கூறப்படுகிறது.
மேலும் தன்னுடைய பெயரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் படம் தயாரித்தால் கடன் காரர்கள் பிரச்சனை செய்வார்கள் என்பதால், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் படம் தயாரித்து வரும் சிவகார்த்திகேயன். தற்பொழுது சூரி நடிக்கும் ஒரு படத்தை கூட அப்படி தான் தயாரிக்கிறாராம். மேலும் வாங்கிய கடனை அடைப்பதாக உத்தரவாதம் கொடுத்த சிவகார்த்திகேயன் அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாமல்,
தன்னிடம் உள்ள பல கோடி ரூபாய் பணத்தை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் பல தொழில்களில் முதலீடு செய்து வரும் சிவகார்த்திகேயன், தற்பொழுது திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சில காண்ட்ராக்டர்களை அவருடைய உறவினர் பெயரில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதனால் கடன் கொடுத்த பைனாசியர்கள் தொடர்ந்து ஆல்வா கொடுத்து வரும் சிவகார்த்திகேயனை இறுக்கி பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக அடுத்து சிவகார்த்திகேயன் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பிரச்சனை செய்ய காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் சிவகார்த்திகேயன் படத்திற்கு பிரச்சனை வருவதும், அந்த நேரத்தில் ஏதாவது செய்து சமாளித்து படத்தை ரிலீஸ் செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது.
ஆனால் கடன் வாங்கிய பைனான்சியர்களுக்கு நிரந்தரமாக செட்டில் செய்து, எப்போது சிவகார்த்திகேயன் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவார் என்பது பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அயலான் மற்றும் மாவீரன் போன்ற படம் ரிலீஸ் ஆகும் போது கடன் கொடுத்தவர்கள் இறுக்கி பிடிக்கலாம் என கூறப்படுகிறது.