காஷ்மீர் பின்னணியில் இந்திய ராணுவத்தை மையப்படுத்தி இந்திய சினிமாவில் எண்ணிக்கை இல்லாமல் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ராணுவ வீரர்களின் உயிர் தியாகம், ராணுவ வீரர்களின் நாட்டை காக்க கூடிய கடமை உணர்வு, இப்படி பல சினிமாக்கள் எல்லா மொழிகளிலும் வந்துள்ளது. குறிப்பாக தமிழில் எத்தனையோ ராணுவம் சார்ந்த படங்கள் வெளியாகி இருந்தாலும் கூட ஒரு தேச பக்தியோடு சேர்ந்து,
அதில் காதல் செண்டிமெண்ட், எமோஷன் இப்படி எல்லா வகையிலும் மக்களை கவர்ந்த படம் என்றால் அது ரோஜா தான். இந்த படத்திற்கு எல்லாவற்றையும் தாண்டி ஒரு புதுமுக இசை மேலும் அந்த படத்தை மெருகேற்றியது. இப்படி ஒரு தேசப்பற்று மிக்க ஒரு படம் தேசிய விருது வரை வாங்கி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் ரோஜா. அந்த படத்தை பீட் பண்ணும் அளவிற்கு இன்னும் தமிழில் எந்த படமும் ராணுவம் சார்ந்த கதையில் வரவில்லை என்று சொல்லலாம்.
ரோஜா படத்தில் பிணை கைதியாக அரவிந்த்சாமி அடைத்து வைக்கப்பட்டு இருப்பார் அங்கே இந்தியக் கொடி தீயிட்டுக் கொளுத்தப்படும், ஓடி வந்து தன் உடலை வைத்து அந்த தேசியக் கொடியை அணைக்கும் அந்த காட்சி படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் நரம்பு புடைக்க ஒரு தேசப்பற்று உணர்வை ஊட்டு வகையில் அமைந்திருக்கும். மேலும் அந்த காட்சியில் வரும் பின்னணி இசை சொல்லவே வேண்டாம்.
இப்படிப்பட்ட ஒரு தேச பற்றுமிக்க படம் மீண்டும் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட படம் தான் அமரன் என்பது அந்த படத்தின் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் உணர்த்துகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் அமரன் படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகிறது.
சிவகார்த்திகேயன் ஆக்சன் ஹீரோவுக்கு எல்லாம் தகுதியானவரா.? அவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் தானே என்று இளக்காராம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்சன் காட்சிகள் நிச்சயம் அமையும் என்பது இந்த படத்தின் டிரைலர் வெளியான பின் பார்த்தபோது நிரூபணம் ஆகிவிட்டது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜனுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் முகந் வரதராஜனவே நடிக்கும் சிவகார்த்திகேயன்.
இது தான் இந்த படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆக இருக்கிறது, ஒரு பயோபிக் படம் எடுக்கும் பொழுது அது ஒரு டாக்குமெண்டரி ஆக அல்லது ஒரு ஆர்ட் பிலிம் ஆக சென்று விடக்கூடாது என்பதற்காக, அமரன் படத்தில் கமர்சியல் செண்டிமெண்ட் காதல் ஆக்சன் என எல்லாம் கலந்தது தான் அமரன். முகுந் வரதராஜன் இந்த நாட்டிற்கு செய்த மிகப் பெரிய தியாகத்திற்காக அவருடைய மனைவிக்கு அசோக சக்கர விருது வழங்கப்பட்டது.
அப்போது அவருடைய மனைவி அந்த விருதை வாங்கும் பொழுது அந்தப் பெண்ணின் தைரியம் இன்னும் ஒவ்வொரு இந்தியனாலும் மறக்க முடியாது. அப்படி ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி மிக அற்புதமாக ஏற்று நடித்துள்ளார் என்பதை இந்த அமரன் படம் வெளியான பின்பு ஒவ்வொருவருக்கும் தெரியும் என்கின்றது பட குழுவினர் . அமரன் படத்தில் வெளியான டிரைலரில் முகுந் வரதராஜன் தன்னுடைய செல்ல பிள்ளையை மடியில் வைத்து அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லிக் கொடுக்கும் அந்த எமோஷனல் இருந்து தொடங்குகிறது.
இந்த காட்சியை இந்த ட்ரெய்லரை பார்க்கும்பொழுது பார்ப்பவர்களுக்கு கண் கலங்குகிறது. அதே நேரத்தில் அந்த ட்ரெய்லர் முடியும்பொழுது அந்த குழந்தை அப்பா வந்துருவார்ல என்று சொல்லும்போது மேலும் எமோஷனை தூண்டுகிறது. இதற்கிடையில் நடக்கும் சம்பவம் தான் இந்த படத்தின் கதை, ஒரு மகன் அவருக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டிய ஆசை, குடும்பத்தில் வேண்டாம் என்கின்றார்கள், அவருக்கு ஒரு காதல் இருக்கிறது, அவர்களும் ராணுவ வேண்டாம் என்று தடுக்குகிறார்கள் அதை எல்லாம் மீறி ராணுவத்தில் சேர்ந்த பின்பு மேஜராக மாறிவிடுகிறார். அதன் பின்பு காஷ்மீரில் என்னதான் நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை.