நடிகர் மற்றும் இயக்குனரான சிங்கம் புலியை, நாம் அனைவரும் காமெடியனாக தான் பார்த்திருப்போம். குறிப்பாக, மாயாண்டி குடும்பத்தார் படத்தில் குழந்தை போன்ற கதாபாத்திரத்தில் நடித்து, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்.. இப்படி இவர் ஒருபுறம் மக்களை சிரிக்க வைத்து மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வருவது போல, இவரின் மனைவி மறுபுறம், மக்களுக்காகவே தன் உயிரையும் துச்சமாக மதிக்காமல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
அதுவும் ராணுவ துறையில் இவர் செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு பல எண்ணற்ற வேலைகளையும் செய்திருக்கிறார். பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் துணை இயக்குனராகவும், ரெட், மாயாவி போன்ற படங்களில் இயக்குனராகவும் பணியாற்றிய சிங்கம் புலி, பிறகு காமெடியன் ரோல்களில் விரும்பி நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து காமெடியனாக நடித்த வந்த இவர், திடீரென விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா படத்தில், வில்லன் ரோலில் என்ட்ரி ஆனார். அதுவும் பாலியல் வன்புணர்வு செய்யும் கேரக்டரில் நடித்ததால், பலரும் அவரை விமர்சித்து வந்தனர். குறிப்பாக, நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கவில்லை என, பலரும் அவரை நேரடியாகவே போன் போட்டு திட்டி இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அப்போதுதான் தன் மனைவி ஒரு கர்னல் என்றும், அவர் இந்த மகாராஜா படத்தை பார்த்தால் என்னை என்ன சொல்ல போகிறார் என்றே தெரியவில்லை என்றும் கவலையோடு ஒரு நேர்காணலில் பேசி இருந்தார். இந்நிலையில் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில், குக்காக என்ட்ரியான இவரை, செஃப் வெங்கடேஷ் பட், உங்களின் கடைசி நேர்காணலை நான் பார்த்தேன், உங்கள் வீட்டு தலைவிக்கு, இந்த நாட்டு தமிழ் மக்களின் சார்பாக ஒரு சல்யூட் என கூறி சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியிருந்தார்.
அப்போதுதான் நடிகர் சிங்கம் புலி, தன்னுடைய மாமன் பொண்ணை தான் நான் திருமணம் செய்து இருக்கிறேன் என்றும், அவரின் பூர்வீகம் அந்தமான், இப்போது அவர் ஆர்மியில் கர்னலாக இருக்கிறார் என பல தகவல்களை கூறியிருந்தார். அதாவது கர்னல் என்பது பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு மூத்த இராணுவ அதிகாரி பதவி. இது சில போலீஸ் படைகள் மற்றும் துணை ராணுவ அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கர்னல் பதவியில் தான் சிங்கம்புலியின் மனைவி இருக்கிறார். இதனால் தான் சன் டிவி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட், நீங்கள் கல்யாணம் பண்ணும் போது அவங்க கேப்டனாக இருந்து, இப்போது நாட்டை காப்பாற்றும் உன்னதமான செயலை செய்கிறார் என பெருமிதத்தோடு கூறியிருந்தார். பிறகு சிங்கம் புலி, தன் மனைவி கார்கில் போரில் இருந்திருக்கிறார் என்றும், அதில் Soldier-களுக்கு 60 நாட்கள் பங்கரில் இருந்து வேலை செய்திருக்கிறார் என்றும் கூறியிருந்தார்,
பிறகு அந்தப் போர் முடிந்ததும், ஜனாதிபதி மற்றும் குடியரசுத் தலைவர் இணைந்து, கார்கில் போரில் வேலை செய்த அனைவருக்கும் ஒரு சாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அதில் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், அதை நம் நாடு செய்து கொடுக்கும் எனக் கூறியிருந்தனர். அப்போது அவரின் மனைவி, இடம் வேண்டும், பெட்ரோல் பங்க் வேண்டும் என, என்ன பெரிய பொருட்களை வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம்,
ஆனால் அவர் அப்படி கேட்காமல், என் அம்மா, அப்பாவுடன் இருக்க வேண்டும் என ஹோம் பிளேயர்களுக்கு போக வேண்டும் என்று கேட்டு, அவரின் சொந்த ஊரான அந்தமானில், ஐந்து வருடங்கள் தன்வந்திரி ஹாஸ்பிடலில் வேலை பார்த்து இருக்கிறார். இது முடித்த பிறகு திரிபுரா சென்ற அவர், அங்கிருந்து பூனே, அதன் பிறகு ராஞ்சி, டேராடூன், ஹைதராபாத், இப்பொழுது ஜபல்பூர் என பல இடங்களுக்கும் மாறி இருக்கிறார்.
மேலும் இப்போது சிங்கம் புலியின் மனைவி கர்னாலகா இருக்கிறார் என அவர் கூறியதும், அந்த நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போயினர். இந்நிலையில் தான் இப்படி காமெடி நடிகராக இருக்கும் சிங்கம் புலியின் மனைவி மிலிட்டரியில் சேர்ந்து நாட்டிற்காக வேலை செய்து வருவதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.