கடந்த சில வருடங்களாக சிலம்பரசன் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வருவதில்லை, இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை, சிலம்பரசனை நம்பி படம் எடுக்கின்ற தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடியவர் சிலம்பரசன் என்கின்ற தொடர் குற்றச்சாட்டின் காரணமாக, சிலம்பரசனை வைத்து படம் எடுப்பதற்கு பல முன்னணி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயங்கி வந்தனர்.
இதனால் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கியிருந்த சிலம்பரசன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது, இந்த நிலையில் மாநாடு படத்திற்கு முன்பு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்த நடிகர் சிம்பு, மாநாடு பட வெற்றிக்குப் பின்பு தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார்.
ஆனால் சிம்பு நடிப்பில் அடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு படுதோல்வியை சந்தித்தது, இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்கிற தோல்வி படத்தை கொடுத்த சிம்பு அடுத்து அவருடைய இயக்கத்தில் வெளியான பத்து தல பட ஆடியோ வெளியிட்டு விழாவில் வழக்கம் போல் தன்னை தானே புகழ்ந்து கொண்டார். எ
அப்போது என்னுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்வது என்பது எனக்கு சத்தியமாக தெரியவில்லை. ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் நீங்கள் எனக்காக என்ன செய்துள்ளீர்கள், என் கூட எப்படி இருந்துள்ளீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நான் சொன்னது போன்று, நான் கஷ்டப்பட்டபோது எனக்காக நீங்கள் முட்டுக் கொடுத்து, என் தலைவன் வருவான், வருவான், வருவான் என்று சொன்னது இன்னைக்கு இன்று என்னை அழைத்து வந்து இங்கே விட்டு விட்டீர்கள்.
ஆனால் இப்போது உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், இனிமேல் நீங்கள் சந்தோசமாக இருங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் நீங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் என் தலைவன் பாருடா, என்ன பண்ணுகிறான் என்று என் தலைவன் வருவான் டா, என் தலைவன் அப்படி டா இப்படி டா என எதுவுமே வேண்டாம், நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்.
நீங்கள் என்னுடைய கஷ்டத்தில் எனக்காக செய்தது போதும், இனிமேல் நான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் பாருங்கள், இனிமேல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மட்டும் சும்மா ஜாலியா, சேர் போட்டு, கூலா ஏசி ரூம்ல உட்கார்ந்து ஹேப்பியா என்ஜாய் பண்ணுங்க, ஏனென்றால் வந்துவிட்டேன், சாதாரணமாக நான் வரவில்லை, வேற மாதிரி வந்து விட்டேன் இம்முறை விடவே மாட்டேன், உங்களை இனிமேல் நான் தலை குனிய விடவே மாட்டேன் என சிம்பு பேசினார்.
ஆனால் ஓவர் பில்டப் விட்ட சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் எதிர்ப்பார்த்த வசூலை பெற வில்லை என்றும் , இது தோல்வி படம் தான் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் தன்னுடைய இமேஜை காப்பாற்றி கொள்ள தோல்வி அடைந்த பத்து தல படத்திற்கு சக்ஸஸ் பார்ட்டி வைத்துள்ளார் சிம்பு.