ஒவ்வொரு முறையும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகும் போது, அதற்கு முன்பு அவர் நடித்த பட தயாரிப்பாளர்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நியாயமாக நடந்து கொள்ளாததால், பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து சிலம்பரசன் படம் எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் பிரச்சனை செய்து அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு தடையாக இருப்பார்கள்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் டிமிக்கி கொடுத்து, யாருடைய உதவியையாவது பெற்று அந்த பிரச்சனை இருந்து விடுபட்டு தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்து விடுவார் நடிகர் சிலம்பரசன். இப்படி ஒவ்வொரு முறையும் டிமிக்கி கொடுத்து வந்த சிலம்பரசன் இந்த முறை வசமாக சிக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சிம்பு, அடுத்தடுத்து அவரிடம் ஒப்பந்தம் செய்தது போன்று அவருடைய தயாரிப்பில் தொடர்ந்து நடிக்கவில்லை.
படத்திற்கான அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டு டிமிக்கி கொடுத்து வந்த சிம்புவுக்கு ஐசரி கணேசன் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், தயாரிப்பாளர் கவுன்சிலிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிம்பு – ஐசரி கணேசன் பிரச்சனையை விசாரிப்பதற்காக தயாரிப்பாளர் கவுன்சிலில் புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, இது தொடர்பான ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற ஒரு படத்தை நடித்து முடித்துள்ள சிலம்பரசன், அடுத்தடுத்து ஐசரி கணேசன் தயாரிப்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி படம் நடித்து கொடுக்காமல் அதற்குள் கமலஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்று கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே ஐசரி கணேசன் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்தது போன்று கொரோனா குமார் என்கின்ற படத்தில் இரண்டு நாள் படப்பிடிப்பிலும் சிலம்பரசன் கலந்து கொண்டது விசாரணை கமிட்டி உறுதி செய்துள்ளது.
இதனால் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசன் நடித்து முடித்த பின்பு தான், அடுத்து எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியும் என்கின்ற ஒரு முடிவுக்கு தயாரிப்பாளர் கவுன்சில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சிலம்பரசன் லண்டனில் இருப்பதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் கவுன்சிலில் அமைக்கப்பட்ட அந்த கமிட்டி சிம்பு தரப்புக்கு ஒரு தகவல் அனுப்பி உள்ளது.
அதாவது ஐசரி கணேசன் தயாரிப்பில் இரண்டு நாள் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்ட கொரனா குமார் படத்தில் நடித்து முடித்த பின்பு அடுத்து நீங்கள் கமலஹாசன் தயாரிப்பில் அல்லது மற்ற எந்த படத்தில் நடிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பு ஐசரி கணேசனிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கொரோனா குமார் படத்தை நடித்து முடித்த பின்பு நீங்கள் வேறு ஒரு படத்திற்கு செல்ல வேண்டும் என தயாரிப்பாளர் கவுன்சிலிங் அமைக்கப்பட்ட கமிட்டி நடிகர் சிலம்பரசனுக்கு தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகர் சிலம்பரசன் லண்டனில் இருந்து வந்த பின்பு தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றும், அதே போன்று நடிகர் சிலம்பரசன் ஒவ்வொரு முறையும், இப்படி ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் ஏமாற்றி டிமிக்கி கொடுத்து வந்த நிலையில், இந்த முறை நடிகர் சிலம்பரசன் தப்பிக்கவே முடியாத வகையில் ஒட்டுமொத்த தயாரிப்பாளர் சங்கமும் ஒருமித்த கருத்தாக சிம்புவை கிடுக்கு பிடி பிடிக்க தொடங்கியுள்ளார்கள்.
ஐசரி கணேசன் தயாரிப்பில் படம் நடித்து முடித்த பின்பே வேறு ஒரு படத்திற்கு சிம்பு நடிக்க செல்ல முடியும். அபப்டி இதில் நடிக்காமல் வேறு ஒரு படத்திற்கு அவர் நடிக்க செல்ல வேண்டும் என்றால் ஐசரி கணேசன் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனுமதித்தால் மட்டுமே வேறு ஒரு படத்தில் சிம்பு நடிப்பதற்காக வாய்ப்பு உள்ளது என்றும் . அதே நேரத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய படத்தை நடித்து முடித்து கொடுக்காமல் வேறு ஒரு படத்தில் நடிப்பதற்கு ஐசரி கணேசன் அனுமதிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
காரணம் நடிகர் சிலம்பரசன் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு, மாநாடு படம் வெளியாவதற்கு மைக்கேல் ராயப்பன் உட்பட பல தயாரிப்பாளர்கள் தடையாக இருந்த போது ஐசரி கணேசன் உதவி செய்து அந்த படத்தை வெளியிடுவதற்காக பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். ஆனால் கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் ஐசரி கணேசனிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடந்து கொள்ளாமல், மேலும் ஐசரி கணேசனை அவமரியாதை செய்யும் விதத்தில் சிம்பு நடந்து கொண்டுள்ளார்.
இதனால் சிம்பு மீது உச்சகட்டத்தில் கோபத்தில் இருக்கும் ஐசரி கணேசன் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே தான் தயாரிப்பாளர் கவுன்சிலில் சிம்பு மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்பு ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வழக்கம்போல் தப்பித்தது போல் இம்முறை சிம்பு தப்பிக்க முடியாது என்றும், அதேபோன்று இம்முறை சிம்புவுக்கு சினிமா துறையில் இருந்து யாரும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.