நீயெல்லாம் சோறு தான் சாப்புடுறீயா.? சிம்புவை வெளுத்து வாங்கிய ஹரி…எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிலம்பரசன் குழந்தை நச்சத்திரமாக நடித்து தமிழக மக்களின் அமோக ஆதரவை பெற்றவர், இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த அணைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்த நிலையில், சிலம்பரசன் ஹீரோவாக நடித்த முதல் படம் காதல் அழிவதில்லை மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த படம் படுதோல்வியை தழுவியது, சிம்பு சுமார் 20க்கு மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் 5 படங்கள் மட்டுமே வெற்றி என்று சொல்லலாம்,

அதில் 2 படம் சுமார் தான், 2012ம் ஆண்டு சிம்பு நடித்த போடா போடி படம் ஓரளவு சுமாராக இருந்தது. இதன் பின்பு சிம்பு குறித்த நேரத்தில் ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை, இதனால் படப்பிடிப்பு தடை பெறுகிறது என்கிற குற்றசாட்டு காரணமாக, சிம்புவை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை. அப்படியிருந்தும் இவர் நடிப்பில் வெளியான படங்களும் தோல்வியை தழுவியதால் நிரந்தரமாக வீட்டிலே ஓய்வு எடுத்தார் சிம்பு.

இதனிடையே சுமார் 9 வருடங்களுக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் வெற்றியை கொடுத்து மீண்டும் தன்னை தமிழ் சினிமாவில் தக்க வைத்து கொண்ட சிம்பு அடுத்து அவரது நடவடிக்கையை பொறுத்து அவர் படங்களின் வெற்றி, தோல்வி அமையும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் சிம்பு ஹீரோவாக அறிமுகமாகி அவர் நடித்த படங்கள் காதல் அழிவதில்லை, தம், அலை என தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில்,

அப்போது மிக பெரிய மிக ஹிட் படமான சாமி படத்தை இயக்கிய பின் அடுத்த படத்துக்கான வேலையில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஹரி கோவில் படத்துக்கான கதையை தயார் செய்திருந்தார்,இந்த படத்தில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் இருந்த ஹரியிடம் வாய்ப்பு கேட்டு சிம்பு அணுகியதும், கதை எல்லாம் தயாராக இருக்கு, ஆனால் என்னுடைய படத்தில் நான் சொல்வதை கேட்டு தான் நடிக்க வேண்டும், கை, கால்களை ஆட்டுவதெல்லாம் என் படத்தில் இருக்க கூடாது.

என ஹரி தெரிவிக்க, அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு, இதனை தொடர்ந்து கோவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சிம்பு எப்படியோ அதே போன்று அப்போதும், படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை, இயக்குனர், கமெரா மேன், என ஒட்டுமொத்த யூனிட் படப்பிடிப்பில் தயார் நிலையில் இருந்தும், சிம்பு மட்டும் தாமதமாக வந்துள்ளார். இது தொடர்ந்து நடத்துளளது.

இதனால் செம்ம டென்ஷன் ஆன ஹரி, ஒரு நாள் சிம்பு அருகில் இருக்கும் போது தனது உதவி இயக்குனரை அழைத்து, ஏன்டா சம்பளம் வாங்கி கொண்டு தான இங்க வேலை செய்கிற, ஒழுங்கா சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வர தெரியாதா.? சோறு தான சாப்பிடுகிற, தாமதமாக வந்தால் படப்பிடிப்பு தாமதமாகும் என்று கூட தெரியாதா, என தனது உதவி இயக்குனரை திட்டுவது போன்று சாடையாக தன்னை தான் இயக்குனர் ஹரி திட்டுவதை உணர்ந்து கொண்ட சிம்பு அடுத்த நாளில் இருந்து சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார் என கூறப்படுகிறது.