தமிழ் சினிமாவில், இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் T.ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. நடிகை உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவரின் முத்த மகன் சிலம்பரசனை சிறு வயதிலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து தனது இயக்கத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தார் T.ராஜேந்திரன்.
1991ம் ஆண்டு தியாக மறுமலர்ச்சி கழகம் என்கிற கட்சியை தொடங்கிய T.ராஜேந்திரன். அடுத்த சில வருடங்களில் அந்த கட்சியை களைத்துவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவின் இணைத்தார். திமுகவில் இவருக்கு சில முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. பின்பு 2004ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய T.ராஜேந்தர் லட்சிய திமுக என்கிற கட்சியை தொடங்கினார், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
2006 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது மீண்டும் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார், அவருக்கு திமுக சார்பில் கூட்டுறவு சங்கத்தில் துணை சேர்மன் பதவி கொடுக்கப்பட்டது. இலங்கை போரின் போது திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, திமுக கொடுத்த துணை சேர்மன் பதவியை ராஜினமா செய்துவிட்டு திமுகவுக்கு எதிரானார். சினிமாவில் சாதித்த T.ராஜேந்திரர் அரசியலில் சாதிக்கமுடியவில்லை.
இந்நிலையில் 67 வயதான T.ராஜேந்திரர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில். மது, புகையிலை, மாது என எந்த ஒரு கேட்ட பழக்கமும் இல்லாத T.ராஜேந்திரனுக்கு என்னாச்சு என்கிற பரபரப்பு நிலவி வரும் நிலையில், அவருக்கு மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளுக்கு குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் T.ராஜேந்திரன் என்று தகவல் வந்தாலும், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. T.ராஜேந்திரர் மேல் சிகைச்சைக்காக சிங்கப்பூர் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்வது மற்ற அணைத்து வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சிலம்பரசன். இதனால் அவருடைய சினிமா பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் சிலம்பரசன்.
T.ராஜேந்திரன் என்ன காரணத்துக்கு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார், தற்பொழுது எதற்காக மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் என்கிற உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், விரைவில் குணம் அடைத்து T.ராஜேந்திரன் வீடு திரும்ப வேண்டும் என சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் T.ராஜேந்திரன் ரசிகர்கள் பிராத்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.