நடிகர் சித்தார்த் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் மதுரை விமான நிலையத்தில் அவமானப்படுத்த பட்டோம் என தெரிவித்திருந்தார். மதுரை விமானநிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் இந்தியில் பேசினார்கள், நாங்கள் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் அவர்கள் இந்தியில் பேசினார்கள், காலியாக இருந்த விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நாங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம் என தெரிவித்த சித்தார்த்.
என் வயதான பெற்றோரிடம் சோதனையின் போது சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டனர். ஆங்கிலத்தில் பேசுங்க என்று தெரிவித்தும் இந்தியில் பேசி மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டதற்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இந்தியில் பேசி மிக கடுமையாக நடந்து கொண்டததாக, சித்தார்த் ஆதரவாக தமிழகத்தில் உள்ள இந்தி எதிர்ப்பு போராளிகள் பொங்கி எழுந்து அவர்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் நடந்த சமபவம் பற்றி தகவல் என்ன என்பது வெளியாகியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அடையாள அட்டையை காட்ட அறிவுறுத்தி, பின்பு முக கவசத்தை விலக்கி அறிவுறுத்தி, அவர்களின் பொருட்களை வழக்கம் போல் அனைவரையும் சோதனை செய்வது போன்று சோதித்து உள்ளனர். சித்தார்த் பெற்றோர் கையில் இருந்த பையை பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்ததில் பரிசோதனை கருவி எச்சரிக்கை ஒலியை ஒலித்துள்ளது.
பொதுவாக நாணயம் உட்பட சிறிய இருப்பு பொருட்கள் பையில் இருந்தால் கூட பரிசோதனை கருவி எச்சரிக்கை ஒலியை ஒலிக்கும், இந்நிலையில் சித்தார்த் பெற்றோர்களின் பையிலிருந்த நாணயங்களை வெளியில் எடுத்துவிட்டு மீண்டும் அந்த பையை பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இது வழக்கமான பரிசோதனை தான். மேலும் நடிகர் சித்தார்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சோதிக்கப்பட்டபோது, அங்கே பணியில் இருந்தவர் பாதுகாப்பு படை பெண் வீரர் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்பு பணியில் இருந்த அந்த பெண் சி.ஆர்.பி.எப் அதிகாரி, சித்தார்த் குடும்பத்தினர் பொருட்களை அடிக்கடி சோதனை செய்த போது, அந்த பெண்ணிடம் தான் ஒரு பிரபல நடிகர் என்று ஆணவத்தில் சித்தார்த் பேச, சார் என் கடமையை தான் செய்கிறேன் என அந்த பெண் தமிழில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சித்தார்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தமிழகத்தை சேர்ந்த அந்த பெண் அதிகாரியிடம் கோபமாக பேசியுள்ளனர்.
இருந்தும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் அதிகாரி, மிக பொறுமையாக , அமைதியான முறையில் அவருடைய பணியை செய்துள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தமிழில் தான் பேசியுள்ளார், அவர் இந்தியில் பேசவில்லை என்கிறது விமான நிலையம் வட்டாரங்கள். மேலும், சித்தார்த் குற்றசாட்டு குறித்து விமான விமான நிலையத்திற்குள் வந்த நேரத்தில் இருந்து, அவர் விமானத்தில் புறப்பட்டு செல்லும் வரை உள்ள அனைத்து காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது என அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளதும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில், நான் ஒரு சினிமா பிரபலம், என்னையும், என் குடும்பத்தினறையும் மற்ற பயணிகள் போன்று சமமாக நடந்து கொள்வதா என அதிகாரிகள் மீது இருந்த கோபத்தின் வெளிப்பாடு தான் சித்தார்த் கையில் எடுத்துள்ள ஆயுதம் இந்தியில் பேசி தன்னை துன்புறுத்தியாக குற்றசாட்டை வைப்பது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.