ஷாருகான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படம் மிக பெரிய வெற்றியை பெற்று, வசூல் சாதனை படைத்து ஷாருகானை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது, கடந்த சில வருடங்களாக இந்தி சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், பதான் படத்தின் வெற்றி ஒட்டு மொத்த இந்தி சினிமா துறையிரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த சூழலில், ஷாருகான் மட்டும் அட்லீயின் செயல்பாடுகளால் மிக பெரிய அப்செட்டில் உள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருகான் நடிக்கும் படம் ஜவான், இந்த படத்தை ஷாருகான் சொந்தமாக தயாரித்து வருகிறார், ஜவான் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற பொது, மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் என்பதால், படப்பிடிப்புக்க தேவையான அணைத்து பொருட்களும் நேரடியாக தயாரிப்பு நிறுவனம் மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. படத்தில் சில காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட வேண்டும் என் அட்லீ தெரிவித்ததை தொடர்ந்து சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.
சென்னையில் நடக்கும் படப்பிடிப்புக்கு தேவையான செட் அமைக்கும் பனி, பொருட்கள் வாடகைக்கு எடுப்பது, என முழுக்க முழுக்க அட்லியின் மேற்பார்வையில் நடந்து வந்துள்ளது, பொதுவாகவே தமிழ் சினிமா இயக்குனர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தேவைக்கு அதிகமான துணை நடிகர்கள், டான்சர்கள், மற்றும் செட் அமைப்பதில் தொடங்கி லைட் வாடகைக்கு எடுப்பது வரை கமிஷன் அடிப்பதை நன்கு அறிந்தவர் ஷாருகான்.
அந்த வகையில் அட்லீ மீது நம்பிக்கை இல்லாமல், சென்னையில் நடைபெற்ற ஜவான் படத்தின் படப்பிடிப்பை தீவிரமாக கண்காணிக்க ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஆடிட்டர் என சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆடிட்டர்களை படப்பிடிப்பு தளத்தில் இறக்கி விட்டு தீவிரமாக கண்காணிக்க வைத்துள்ளார் ஷாருக்கான். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும், இது எதற்கு, எவ்வளவு வாடகை, எத்தனை தடவை பயன்படுத்த பட்டுள்ளது என தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார்கள் ஆடிட்டர்கள்.
அதில் பல பொருட்கள் பயன்படுத்தப்படாமல், சும்மாவே இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உச்சகட்டமாக ஹை ஸ்பீடு கேமரா ஓன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு கடைசி வரை பயன்படுத்தப்படாமல் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. கமிஷனுக்கு ஆசை பட்டு தேவைக்கு அதிகமான பொருட்களை வாடகைக்கு எடுத்து அதை பயன்படுத்தாமல் கமிஷன் அடிக்கும் செயலை அட்லி செய்து வருவதாக ஆடிட்டர்கள் நோட் செய்துள்ளார்கள். இந்த தகவல் ஷாருகான் கவனத்துக்கு சென்றுள்ளது.
ஏற்கனவே தமிழ் சினிமா இயக்குனர்களின் தில்லாலங்கடி வேலையை நன்கு அறிந்து தான் ஆடிட்டர்களை களம் இறக்கிவிட்டு பரிசோதனை செய்துள்ளார் ஷாருகான். இந்த நிலையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட சுமார் 14 கோடி அதிகமாகி உள்ளது. உடனே அட்லீயை நேரில் அழைத்து ஷாருகான் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார், அதற்கு அட்லீ முறையான பதில் ஏதும் தெரிவிக்க முடியமால் மழுப்பலாக பதில் சொல்லியுள்ளார்.
உடனே ஆடிட்டர் ரிப்போர்ட்டை தூக்கி காண்பித்த ஷாருகான், கமிஷனுக்கு ஆசைப்பட்டு தானே தேவைக்கு அதிகமான துணை நடிகர்கள், தேவையில்லாத பொருட்களை வாடகைக்கு எடுத்து, அதை பயன்படுத்தாமலே திருப்பி கொடுத்துள்ளீர்கள், என லெப்ட் ரைட் வாங்கியுள்ளார் ஷாருகான், இதனை தொடர்ந்து ஷாருகான் கோபம் குறையட்டு, என மும்பையில் இருந்து வெளியேறி கடந்த சில நாட்களாக சென்னையில் இருக்கும் அட்லீ.
ஷாருகான் கோபம் குறைந்ததும் மீண்டும் மும்பை சென்று ஜவான் படத்தின் வேலைகளை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் இந்த திருட்டு தனமெல்லாம் என்கிட்ட வெச்சுகாதா என்கிற தோரணையில் ஷாருக்கான் அட்லீயை வெளுத்து வாங்கிய சம்பவம் இந்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழ் பட இயக்குனர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என பிற மொழி தயாரிப்பாளர்கள் முணு முனுத்து வருவது குறிப்பிடத்தக்கது.